விருந்தினராக நாம் அமெரிக்கா சென்றால், முக்கியமான ஒரு பிரச்சினை, எப்படி பொழுதுபோக்குவது என்பது. குழந்தைகள் அலுவலகமோ, படிக்கவோ சென்று விடுவார்கள். வீட்டில் இருக்கும் மகனோ, மருமகளோ அவர்களுக்கென்று ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சமயத்தில் நமக்கு உதவியாக இருப்பது, சன்-டிவி , கம்ப்யூட்டர் போன்றவைதான். கொஞ்சம் ஆங்கிலம் பழக்கப்பட்டவர்கள், கம்ப்யூட்டரில் பேப்பர் படிக்கலாம். கதைகள் , செய்திகள் படிக்கலாம். இந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது, எனது படிக்கும் பழக்கமே. பிறரின் வாழ்க்கை வரலாறு, நாட்டின் கதை, உலக விஷயங்கள் இப்படித்தான் எனக்குப் படிக்க பிடிக்கும். இருப்பினும், ஏற்கனவே என் மகன் வாங்கிவைத்திருந்த , எனக்காக ஹூஸ்டன் மீனாட்சியம்மன் புத்தகக் கடையில் வாங்கிய புத்தகங்களை படித்தேன். நான் அப்படி படித்த புத்தகங்களை, அவைகளை எழுதிய ஆசிரியர்கள் வரிசையில் வகைப்படுத்தியிருக்கிறேன்.
சுஜாதா
– எப்போதும் பெண்
– நிலா நிழல்
– கற்றதும் பெற்றதும்
– ஆ..!
– ஓரிரு எண்ணங்கள்
– புறநானுறு ஒர் எளிய அறிமுகம் (முதல் தொகுதி)
– ஐந்தாவது அத்தியாயம்
– ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
– ஒரு நடுப்பகல் மரணம்
– ஜீனோம்
– வசந்தகால குற்றங்கள்
– நூற்றாண்டின் இறுதியில் சில சாதனைகள்
– அனுமதி
– பதினாலு நாட்கள்
– நில் கவனி தாக்கு
– விவாதங்கள் விமர்சனங்கள்
– தலைமைச் செயலகம்
– கறுப்புக் குதிரை
ஜானகிராமன் :
– மோகமுள்
– அடுத்த வீடு ஐம்பது மைல்
– பிடி கருணை
– அமிர்தம்
மதன் :
– வந்தார்கள் வென்றார்கள்
கதிரவன் எழில் மன்னன் :
– ஓர் அமெரிக்கர் தமிழரின் பார்வையில்
பாரதியார்
– படிக்கவேண்டிய பாரதியார் கதைகள்
சிவலிங்கம் /APJ அப்துல்கலாம்
– அக்னிச்சிறகுகள்
நீல பத்மநாபன்
– நீல பத்மநாபன் கதைகள் (4)
தென்கச்சி கோ சுவாமிநாதன்
– இன்று ஒரு தகவல் (பாகம் – 21)
சு. சமுத்திரம்
– சு சமுத்திரம் கதைகள்
மு. மேத்தா
– மகுட நிலா
கண்ணதாசன் :
– கடைசிப்பக்கம்
– அர்த்தமுள்ள இந்துமதம்
டாக்டர் சி எஸ் எஸ் சோமசுந்தரம்
– உலக மகா ஞானிகள்
சி. சு. செல்லப்பா
– எழுத்து
புதுமைப்பித்தன்
– மொழிபெயர்த்த உலகச் சிறு கதைகள்
பிரபஞ்சன்
– வானம் வசப்படும்
– ஒரு சிநேகத்தின் கதை
வாஸந்தி
– பார்வைகளும் பதிவுகளும்
ஜெயகாந்தன் :
– சுந்தரகாண்டம்
இந்திரா சௌந்தரராஜன்
– காற்று.. காற்று .. உயிர்
(என் தந்தையின் 2007 அமெரிக்கப் பயணம் சமயம், அவரது பார்வையில் எழுதி வைத்திருந்தது – ஆஸ்டின் சௌந்தர்).

Leave a comment