Category: வாசிப்பு
-

நீர்வழிப் படூஉம் – என் வாழ்வனுபவம்
ஒரு நல்ல நாவல் என்பது இது எல்லாவற்றிற்கும் ஆம், ஆம் என்று நீர்வழிப் படூஉம் நாவல் குறித்து நான் சொல்வேன். இந்த நாவலுக்கு நான் விமர்சனமோ வாசிப்பனுபவமோ எழுதப்போவதில்லை. ஏனெனில் நாவலில் வந்தவர்கள் அனைவரும் என்னுடன் பயணித்தவர்கள் அல்லவா? அவர்கள் குறித்த ரகசியத்தை உங்களிடம் எப்படி சொல்வேன் ? மானுடத்தின் மீதும் வாழ்வின் மீதும் பிரியம் கொள்ளச் செய்யும் நாவலை எழுதிய எழுத்தாளர் தேவிபாரதிக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
-

வாசிக்கவைக்கும் அப்பாக்கள்
சேட்பாட்டிடம் ஒரு கேள்வியை கேட்க, அது தன்னை ஜட்ஜ் பண்ணும் என்ற கவலையில்லை. நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. AI-ஐ தனது நண்பனென பாவிக்கும் , எல்லாமே அதற்குத் தெரியும் என்று நினைக்கும் நண்பர் ஒருவர், “Why do we celebrate Father’s Day ?” என்று கேட்டுக்கொண்டிருக்கலாம். எனக்கு நண்பன் எல்லாமே புத்தகம்தான். எனக்கான எண்ணற்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் புத்தகங்களில் ஒன்றான, ‘நாலு மூலை’ என்ற…
-

பண்பாட்டைக் கண்டடைதல் – ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூரிலும் அவினாயபுரத்திலும் நடக்கும் ஜல்லிக்கட்டில், வாடிவாசல் வழியே துள்ளி வரும் காளையை அடக்க, ஜீன்ஸும் டீசர்ட்டும் அணிந்த இன்றைய இளைஞர்களில், எத்தனை சதவீதத்தினருக்கு, அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் முன்னோர்கள் மேல்சட்டை கூடப் போடாமல் நடுமுதுகில் வியர்வை ஆறென ஓட, காளையை அணைவார்கள் எனத் தெரியும்? காளையின் திமிலைப் பிடிக்க முயற்சி செய்து வழுக்கி விழும் இளைஞன் ஒருவனைப் பார்த்து, “காளையின் கொம்புகளை கண்டு அஞ்சுபவனை மறுபிறவியிலும் தொடமாட்டேன்” …
-

பண்பாட்டைக் கண்டடைதல்
நான் மிகவும் தாழ்வு மனப்பான்மையாக உணர்ந்த தருணம் அதுதான். வேலை பார்க்கும் அலுவகலத்திலேயே, ஒரே வேலையை பல வருடமாக செய்து சலித்துப்போய், இன்னொரு துறைக்கு மாற்றிக்கொண்டு சென்றிருந்தேன். புதிய குழுவில் அறிமுகமான நண்பர் சேடிடம், சம்பிரதாயமான குடும்பம் குடித்தனம் கேள்விகள் வந்த பொழுது, அவருக்கு ஒன்பது குழந்தைகள் என்றார். எட்டுப் பெண்கள் ஒரு பையன். “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்,” என்ற கேள்விக்கு, ஒரே பையன் என்று சொன்னால் சாதனையாளனாக இருக்காது.…
-

வாசிப்புப் பயணம் – 2025
யாராவது , ஒரு ரகசியம், உங்களுக்கு அப்புறம் சொல்கிறேன் என்று என்னிடம் சொன்னால், பரவாயில்லை அப்புறம் சொல்லுங்கள் என்று எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் இருப்பேன். ராதா-விடம் , ‘சாப்பிடறப்பதான் இது ஞாபகம் வருகிறது. இப்பச் சொன்னா நல்லா இருக்காது’ என்று பீடிகை போட்டால், அவரால் சாப்பிடமுடியாது. இப்படி இருவரும் வெவ்வேறுவிதமாக இயங்குபவர்களாக இருந்தாலும் , ஜெகதீஸ்குமாரின், பொற்குகை ரகசியம், சிறுகதை தொகுப்பை, எந்தக் கதையில் என்ன ரகசியம் வைத்துள்ளார் என்று…
-

காதலின் பல வண்ணங்கள்
இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிய கணத்தில் அவர்களுக்குள் காதல் பிறந்தது. விஷ்ணுபுரம் விருது விழா – 2019-ல் இசையின் கண்களை நான் சந்தித்த கணத்தில் “இவரை பார்த்தா எம் எல் ஏ மாதிரி இருக்காரு. இவர் எப்படிக் கவிதை எழுதுவாரு” என்றுதான் லௌகீக சௌந்தராக முதலில் நினைத்தேன். அவருக்கான விழா அமர்வில், அவர் பேசப்பேசவே வாசகன் சௌந்தராக, கவிஞர் இசையை இனம் கண்டு கொண்டேன். திருச்சிக்குப் போனால் தவறாமல்…
-

மழையில் நனையும் குதூகலம்
(08/01/2019-ல் எழுதிய வாசிப்பனுபவத்தின் மீள்பதிவு) நான் வாழ்வின் ஆதாரத் தேடுதலுக்காக பார்க்கும் மென்பொருள் உருவாக்கும் பணியில், எழுதிய மென்பொருள் நினைத்தபடி வேலை செய்கிறதா என்று சுய பரிசோதனை (unit testing) செய்ய வேண்டும். அப்புறம் ஒரு கட்டமைப்பானா அடிப்படை சோதனைகளை (Smoke Testing) கடக்கிறதா என்று பார்க்கவேண்டும். இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, மற்ற பயனர்கள் பார்வையில் , எழுதியவன் நினைத்து பார்க்காத சோதனைகளைகளையெல்லாம் (Regression testing) கடக்கவேண்டும். அதையும்…
-

பாடுபொருள்களால் ஈர்த்தவர் – ரமேஷ் பிரேதன்
முப்பது நாற்பது வருடங்களாக எழுத்தையே தவமாகக் கொண்ட எழுத்தாளுமைகள், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின் பின் நவீனத்துவம் என்று தத்துவார்த்தமாக படைப்புகளை அலசும் விமர்சகர்கள், சுவாசிப்பதற்கு இணையாக வாசிக்கும் வாசகர்கள் உள்ள ஒரு கூடுகைவில் / விழாவில் இங்கு பேச அழைக்கப்பட்டிருக்கும் நான் யார் ? கடந்த ஏழு எட்டு வருடங்களாக, அமெரிக்காவிலிருந்து ஊர் வரும் சமயம் சுற்றம் , கோவில் குலதெய்வங்களை பார்க்கும் வழமையிலிருந்து, எழுத்தாளர்களை / ஆளுமைகளையும்…
-

யாதுமாகி
தமிழில் தலைசிறந்த வாசகர்களில் ஒருவரான, கோவை விஜயா பதிப்பகம் பதிப்பாளர், விஜயா வேலாயுதம் முன்னெடுப்பில் கொடுக்கப்படும் ‘கி.ரா. விருது ’-விற்கு, தனியார் இலக்கிய அமைப்புகளால் தமிழ் நாட்டிலிருந்து கொடுக்கப்படும் விருதுகளில் தலைமையான இடம் உண்டு . 2022-ஆம் வருடத்திற்கான, கி.ரா. விருது , எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் வாழ்கிற தமிழர்களில் ஒருவர், தமிழுக்கு செய்கிற சேவையை பாராட்டும் பொருட்டும், அவர் தலைசிறந்த படைப்பாளியாக இருப்பதை குறித்தும் இந்த…
-

ப்ளம் கேக் – திகட்டாத இனிப்பு
விருந்திற்குச் சென்ற இடத்தில் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமோ, கேக்கோ கொடுத்து மேலும் உபசரிப்பை இனிமையாக்குவார்கள். கனடா தோழி இந்துமதி, அவர் வீட்டு விருந்து முடிந்து எங்களுக்குப் பரிமாறியது, ஆனந்த் குமார் கவி மனதுடன் படைத்துக் கொடுத்த ‘ப்ளம் கேக்’. இந்தப் பிரபஞ்சத்தின் மீது இருக்கின்ற பிரியத்தையெல்லாம் பிரயோகித்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் துளித் துளியெண உண் எனச் சொல்லும் கவிஞனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இந்த நாள்தான் உன்…