நீர்வழிப் படூஉம் – என் வாழ்வனுபவம்

Published by

on

ஒரு நல்ல நாவல் என்பது

  • ஒரே மூச்சில் முழு நாவலையும் எத்தனை பக்கமாக இருப்பினும் கவனத்தை சிதறவிடாமல் வாசிக்க வைப்பது
  • வாசித்துமுடித்ததும் எதிர் சுவரைப் பார்த்துக்கொண்டு விழி பிதுங்கி அமர்ந்திருக்கச் செய்வது
  • இனி ஒரு வாரத்துக்கு எதுவும் வாசிக்கமாட்டேண்டா சாமி, இதை அப்படியே மனசுக்குள்ள வைத்துக்கொண்டு கொண்டாடுகிறேன் சாமி என நினைக்க வைப்பது.
  • ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்த வயதானவனாக நாவல் முழுவதையும் அசைபோட வைப்பது. 
  • இப்படி எழுதியிருக்கலாம் அப்படி எழுதியிருக்கலாம் என்று கொஞ்சம்கூட யோசிக்கவைக்காமல் இருப்பது.
  • இந்தக் கதாபாத்திரம் அந்தக் கதாபாத்திரம் மனதில் நின்றது என்று சொல்லமுடியாமல், நாவலில் வந்த அனைவரும் வாழ்வில் உடன் வந்தவர்கள்போல் அவரவராக நின்றுவிடுவது
  • இன்னொரு நாவலுடன் ஒப்பிடத் தேவையில்லை.  அது அதுவாகவே நன்றாகத்தானே இருக்கிறது என நினைக்க வைப்பது
  • நாவலில் எதுவும் யாரும் பொய்யில்லையென உணர வைப்பது

இது எல்லாவற்றிற்கும் ஆம், ஆம் என்று நீர்வழிப் படூஉம் நாவல் குறித்து நான் சொல்வேன்.  இந்த நாவலுக்கு நான் விமர்சனமோ வாசிப்பனுபவமோ எழுதப்போவதில்லை. ஏனெனில் நாவலில் வந்தவர்கள் அனைவரும் என்னுடன் பயணித்தவர்கள் அல்லவா? அவர்கள் குறித்த ரகசியத்தை உங்களிடம் எப்படி சொல்வேன் ? 

மானுடத்தின் மீதும் வாழ்வின் மீதும் பிரியம் கொள்ளச் செய்யும் நாவலை எழுதிய எழுத்தாளர் தேவிபாரதிக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். 

2 responses to “நீர்வழிப் படூஉம் – என் வாழ்வனுபவம்”

  1. selvaa1965 Avatar

    வணக்கங்க .இந்த நாவலை வாசித்து முடித்த காலத்தில் என் மனதில் ஓடியவற்றை அப்படியே எழுதியிருக்கிறீங்க . நன்று நன்றினும் நன்று இந்தப் பதிவு. நன்றி 👋☺️👍😌

    Like

    1. Austin Soundar Avatar

      வணக்கம் நண்பரே! தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி !

      Like

Leave a comment