நீச்சல் தெரியாதவனை
குதியெனச் சொல்லிவிட்டு
மூழ்கி மூழ்கி
மொத்தமாக மேலே போகும் முன்
மூன்று முறை மேல்வருவாய்
காப்பாற்றிவிடுவேன் என
கடும் நீச்சல் கற்றுக்கொடுக்க
படியிறங்கி வரும் என் அய்யா !

எக்கணமும் சிக்கனம் தேவை
நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு
நல்லது கெட்டதென்றால்
நாம துணை நிக்கனுமென
வழிநடத்துன
அய்யாவின்
நேரடித் தம்பி, சின்னய்யா !

யாருக்கு எங்க பொண்ணு பிறந்திருக்கும்
இந்தப் பொண்ணுக்கு அந்த மாப்பிள்ளையென
காலமெல்லாம் யோசிச்சு
எனக்கும் பார்த்து வைச்ச
சின்ன சிற்றப்பா!

தன் மகளை
உன் தாரமென
தாரை வார்த்த தந்தை !

விவசாயி நெல்லையும் விதைக்கலாம்
கதையையும் விதைக்கலாமென
என் நெஞ்சில்
இலக்கியம் வளர்த்த தந்தை கி.ரா.

தமிழை வளர்க்க
நல்லொளி ஏற்ற
என்னை வழி நடத்தும்
அ. முத்துலிங்கம்
தந்தைகள்
ஆமாம்
என் வழி நெடுக தந்தைகள் !

Leave a comment