Category: இன்ன பிற

  • எல்லாம் நன்மைக்கே

    எல்லாம் நன்மைக்கே

    ஓங்கிய மரமொன்றை  வழியில் கண்டால் நீர்தேடிச் செல்லும் அதன் வேர்கள் எதுவரை சென்றுள்ளன  என விசாரிப்போம் ! நதியோடு நதியாக  இணைந்து செல்லும் பாதையில்  நடப்போம் ! சலசலவென அது சொல்லும் கடந்துவந்த கதை கேட்போம்! மெய்மறந்து அமைதி காக்கும் நதியாயின் அப்படியே ஆகட்டும் என்று  உடன் பயணிப்போம். மலை ஏறுவோம் ஏறிய மலையில் பறவைகள் சாப்பிட்டது போக  மீதியிருக்கும் பழங்களை சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிடுவோம். புலி கரடி வந்தால் …

  • பெயரை அழைப்பதில் இருக்கிறது – நட்சத்திர உரையாடல்

    பெயரை அழைப்பதில் இருக்கிறது – நட்சத்திர உரையாடல்

    என்றுமில்லாத திரு நாளாக, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வானத்தைப் பார்த்தால், அப்பா நட்சத்திரத்தின் அருகில் இருக்கும் அம்மா நட்சத்திரத்தைக் காணோம். என்றைக்கும் விட இன்றைக்கு அப்பா நட்சத்திரத்தை சுற்றிலும், பெரும் நட்சத்திரங்களின் கூட்டம். அத்தனை நட்சத்திரங்களும், என்னைப் பார்த்து கண் சிமிட்டின. என்னிடம் அவைகளுக்கு சொல்வதற்கு நிறைய இருக்கிறது என்று எத்தனித்தன.  “அய்யா, எங்க அம்மாவைக் காணோம்? “ என்றேன்.  “நீ , என் பேரு சொல்லி எழுதிட்டேனு…

  • பெயரை அழைப்பதில் இருக்கிறது

    பெயரை அழைப்பதில் இருக்கிறது

    அப்பா, தகப்பா, வரதப்பா,  பிறந்த  நேரம், நட்சத்திரம் குறிப்பிட்டு, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யாராவது உங்களிடம் யோசனை கேட்டால், பெயரில் என்ன இருக்கிறது ? கோடீஸ்வரன் என்று பெயர் வைத்தால் போதுமா, உழைச்சாத்தான பணக்காரனாக முடியும் என்பீர்கள்.  உங்க அப்பா சொன்னார் என்று எனக்கு சௌந்தரராஜன் என்று பெயர் வைத்தீர்கள். பௌதியம்மன் கோவில் திருவிழாவில் வாங்கியிருந்த  ‘பட்டிக்காடா பட்டணமா’ பாட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு,  வீட்டின் முன்னால் கட்டியிருந்து…

  • போங்கடா நீங்களும் உங்க AI-யும்

    போங்கடா நீங்களும் உங்க AI-யும்

    வீட்டை வாடகைக்கு விடும் முதலீட்டாளர்களுக்கு இது தெரிந்திருக்கலாம். கேஸ், தண்ணீர், எலெக்ட்ரிசிட்டி வகையறா வகையறாவிற்கு லேண்ட் லார்ட் கணக்கு என்று ஒன்று வீட்டின் உரிமையாளர் வைத்துக்கொள்ளலாம். வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டைக் காலி பண்ணினால்,  யுடிலிட்டி கணக்குத் தானாக வீட்டு உரிமையாளருக்கு மாறிவிடும். அடுத்துப் புதிதாக ஒருவர் குடிவந்துவிட்டால்,  அவர் அழைத்துச் சொன்னால் , அவரது பெயருக்கு மாறிவிடும்.  வீட்டில் யாரும் குடியில்லாதபொழுது உரிமையாளர்தான் பில் கட்டவேண்டும். என் நண்பர் ஒருவருக்கு…

  • தெரிந்தது இரண்டு தெரியாதது எட்டு

    தெரிந்தது இரண்டு தெரியாதது எட்டு

    ஒரு மகன் வெளியூர் சென்று சம்பாதிக்கவேண்டும் என தன்  தாயிடம் மன்றாடுகிறான். தாயிற்கோ மகனைப் பிரிய இஷ்டம் இல்லை. சென்றே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மகனுக்கு கட்டுச்சாதம் கட்டி அனுப்பி வைக்கும்பொழுது, தாய், “போகும் வழியில் புளியமரத்தின் அடியில் சாப்பிட்டு ஓய்விடு, ஊருக்குத் திரும்பி வரும் வழியில் வேப்பம் மரத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாறு” என்கிறாள். அன்னையின் ஆணைப்படி, செல்லும் வழியில் புளியம் மரங்களை கண்டு ஓய்வு எடுக்கிறான்.…

  • பாரதி ராஜா – அஞ்சலி

    பாரதி ராஜா – அஞ்சலி

    நான் முளைத்து மூன்று இலை விடாததற்கு முன்னரே, என்னைவிட வயதில் மூத்த சகோதர்களால் ,  நல்ல படத்திற்குப் பின்னால் இருப்பவர் இயக்குனர் என்பதை கற்றுக்கொண்டேன். திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி. நாகராஜனிடம் என்ன சிறப்பு, பாலச்சந்திரனின் கதாநாயகி செருப்பைக் கழட்டிக்கொண்டே வசனம் பேசுகிறாள், ஶ்ரீதர் படம்,  என்று வீட்டு முற்றத்தின் நிலா வெளிச்சத்திலும், பள்ளி சென்று வீடு திரும்பும் நடைபாதையிலும்,   பாலபாடம் எடுத்தார்கள்.  பெல்பாட்டம் பேண்ட் போட்ட ஒரே…

  • தன்னை முன்னிறுத்தலும் ஆவணப்படுத்தலும்

    தன்னை முன்னிறுத்தலும் ஆவணப்படுத்தலும்

    தனக்கிருக்கும்  அசையா சொத்து அசையும் சொத்து எனப்பேசி நான் பெரிய ஆளென பெருமை கொள்ளும் தற்பெருமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதிவு இல்லை இது. எழுத்தாளனாக, ஓவியனாக, இசைக்கலைஞனாக, பாடகனாக, அறிவியளாலனாக  தனது துறையில், தனக்கென தனித்துவம் கொண்டு, அயராது உழைக்கும் ஒருவர்,  கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பவருக்கு, தன்னை முன்னிறுத்தலையும் அதை சார்ந்து ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் பதிவு.  அமெரிக்க நிறுவனங்கள், வசந்த காலத்தில், கல்லூரி பல்கலைக்கழகங்களிலிருந்து சில மாணவர்களை…

  • ஊர் நிலவரம் – ஜனவரி 2026

    ஊர் நிலவரம் – ஜனவரி 2026

    கிராமத்து வீட்டில் இருக்கும் நாட்களில் , காலை நடைக்குத் தயாரானால், ‘சாமி, பனி தலையில் இறங்கும்’ என்று அக்கா தடுத்துவிடுவார்கள். மாலை நடை மட்டும்தான். அப்பாவையும், அக்காவையும், குடும்பத்தையும் தெரிந்தவர்கள், எங்களை வழியில் நிறுத்திப் பேசுவார்கள். அப்பாவின் வார்த்தைகளில் உரம் பெற்று வாழ்க்கையை சுமுகமாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு எங்களிடம்  சொல்வதற்கு நிறைய இருக்கும்.  வேறு யாரோ என்று எங்களை புரிந்துகொண்டு நலம் விசாரிப்பார்களும் உண்டு. பள்ளி முடிந்து திரும்பும் குழந்தைகள் யாரென…

  • அரைப்படி சேர்த்துப் போடு

    அரைப்படி சேர்த்துப் போடு

    என் அம்மா பிறந்த ஊரில் , குத்தகைக்கு தோட்டம் பிடித்து அங்கேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால், ஊரே எல்லாம் என் தந்தையை மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். அவர் குத்தகைக்கு எடுக்கவிருந்த தோட்டம் ஒன்றில், அதிகம் நடமாட்டமுள்ள பாதையின் அருகில் வீடு  இருந்தது. போவோர் வருவோர் எல்லாம், “மாப்பிள்ளை, நீ அந்தத் தோட்டத்தை குத்தைக்கு எடுத்தைனா, சாப்பாட்டுச் செலவு அதிகமாகும் பாத்துக்கோ” என்றார்கள். மண்ணின் தன்மையையும், நீர் வளத்தையும் மட்டும் பார்த்து ஒரு…

  • சாருக்கானின் தலை, தவளையின் உடம்பு

    சாருக்கானின் தலை, தவளையின் உடம்பு

    எனக்குப் பெண்களைப் பிடிப்பல்லை. குறிப்பாக, மிகக்குறிப்பாக என் வகுப்பில் படிக்கும் பெண்களைப் பிடிப்பதில்லை. பத்து வயதான நான் இப்படிச் சொன்னால், அம்மா, அதற்கு, இன்னும் ஐந்து வருடம் கழித்து இப்படிச் சொல்கிறாயா என்று பார்க்கலாம் என்று குறுஞ்சிரிப்பு சிரிப்பார்கள். எனக்கு அந்தக் குறுஞ்சிரிப்பின் அர்த்தம் புரிவதில்லை. கதை, என்னைப் பற்றியோ, எனக்குப் பெண்களைப் பிடிக்காததைப் பற்றியோ அல்லது என் அம்மாவின் கிண்டலைப்  பற்றியோ இல்லை. இந்தக் கதை, அங்கிள், ஆண்டி…