Category: இன்ன பிற

  • நட்பின் குறுக்கே வந்த கணினி சூத்திரங்கள் 

    நட்பின் குறுக்கே வந்த கணினி சூத்திரங்கள் 

    பாரதிராஜாவின் கடலோரக்கவிதைகளில், சின்னப்ப தாஸ் (சத்யராஜ்) சுவரில் எழுதியிருக்கும் எழுத்துக்கள் எல்லாம் வௌவ்வால்கள் தொங்குவது போல் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, ஜெனிஃபர் (ரேகா) டீச்சரைக் காதலித்த காலகட்டத்தில், நான் திருச்சி தேசியக் கல்லூரியில், முதுகலை இரண்டாம் வருடம்  படித்துக்கொண்டிருந்தேன்.  கல்லூரியின் வாசலில்,  வலது பக்கத்தில் இருக்கும் கோவிலில் பிள்ளையார் கிழக்குப் பார்த்து அமர்ந்திருப்பார். கல்லூரி வாசலுக்கு நேர் எதிரே இருந்த குடித்தனங்களின் சுற்றுச் சுவரில், கல்லூரியின் சுற்றுச் சுவரில் எனப்…

  • அம்மாவின் நம்பிக்கை

    அம்மாவின் நம்பிக்கை

    (மறு பிரசுரம்) “எல்லம்மாள்தான் எனக்கு எல்லாம். எல்லாம் எனக்கு எல்லம்மாள்தான்” என்று இருப்பவன் நான். எல்லம்மாள் , எனது அம்மாவின் பெயர். இளங்கலை மூன்றாம் வருடம், கடைசித் தேர்வு. அந்தப் பாடத்தை , நான் எள்ளளவும் படித்ததில்லை. மற்ற தேர்வுகளுக்கும் அந்தக் கடைசி தேர்வுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை இருந்தது. அந்த மூன்று நாட்களில் , “எல்லாம் படித்துவிடலாம், என்ன பெரிய? “ என்று இருந்தேன். முதல் இரண்டு நாட்கள்,…

  • புலம்பெயர்ந்தவனின் பெரும் இழப்பு

    புலம்பெயர்ந்தவனின் பெரும் இழப்பு

    தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான இயல் விருதைப் பெறும் கவிஞர் ரவிசுப்பிரமணியன் கனடா வந்துள்ளார். அவரை நண்பர்கள் சகிதமாக சென்று பார்க்கும் நிமித்தம் முன்னிட்டு ஒரு airbnb வீட்டை பதிவு செய்துவிட்டு, அந்த விலாசத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு அவர் “ஏன் சௌந்தர் , நான் செக்க கண்டனா சிவலிங்கத்த கண்டனா வாடான்னா வரப்போறேன்” என்று பதில் அனுப்பியிருந்தார். இதைப்போன்ற சொல்லாடல்கள் புலம்பெயர்ந்த எங்கள் வாழ்வில் இல்லை. ஆங்கிலமும்,…

  • வணக்கம் தலைவி

    வணக்கம் தலைவி

    அம்மா சமைத்துக்கொடுத்த இந்திய உணவை எடுத்துக்கொண்டு சென்று பள்ளியில் சாப்பிடும்பொழுது சக மாணவர்களின் கிண்டலுக்கு உள்ளாவதும், பெண்ணேன்றால் அடங்கிப்போ என்று ஆதிக்கும் செலுத்தும் அப்பாவும் என வலிகளை சுமந்த வாழ்க்கையை மீட்டெடுத்தது இசையும் பாட்டும்தான் என்று சொல்லும் பாடகி வித்யா வாக்ஸின் பன்மொழி மாஸ் அப் பாடல்களை பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். “We don’t talk anymore” என்ற செலினா கோமஸ் பாடலை வித்யா வாக்ஸும், “பானி டா…

  • வாழ்க்கைச் சுழல் (மறு பதிவு) 

    வாழ்க்கைச் சுழல் (மறு பதிவு) 

    சுழல் – 1: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து , பொறியியல் கல்லூரியா, கலை அறிவியல் கல்லூரியா என்று காத்திருந்த நாட்கள் அது. திண்டுக்கல்லில் பெரிய அண்ணன் ஒருவர் , “தம்பி, நம்ம திருச்சி MLA -கிட்ட சொல்லி, பொறியியல் கல்லூரியில்  உனக்கு சீட் வாங்கிவிடலாம்”  என்றார். அவரைப் பார்க்க சில காலை நேரங்களில் காத்துக்கிடந்திருக்கிறேன்.  காலங்கள் பல கடந்து, NIC-யில் வேலை பார்க்கும்பொழுது , அதே பெரிய அண்ணனின் பெரிய…

  • தங்கையின் கைப்பக்குவம்

    தங்கையின் கைப்பக்குவம்

    ஞாயிற்றுக்கிழமை காலை.  இளையராஜா இசை வீடு முழுக்க காற்றென நிறைந்தது.  whatsapp-ல் ஒரு அழைப்பு.  “என்னக்கா, பண்ணிக்கிட்டிருக்கீங்க… “ சித்ரா “முருங்கைக் கீரையை, யூஸ்வலா, இந்தியன் ஸ்டோர்ல வாங்குவோம். முத்தன இலையா இருக்கும். இது சான் ஆண்ட்னியோ ஃப்ரெண்ட் கோபி, அவரு வீட்டுத் தோட்டத்திலிருந்து கொடுத்தது. கொழுந்து இலையா நல்லா இருக்கு . ஒவ்வொண்ணா பிய்க்கறதுக்குத்தான் கடியா இருக்கு…  “ ராதா “ஒவ்வொண்ணா எவ்ளொ நேரம் அக்கா பிய்க்கிறது. அப்படியே…

  • பொய் சத்தியம் செய்தவளே, நீ வரவில்லை

    பொய் சத்தியம் செய்தவளே, நீ வரவில்லை

    அவனை நேர்முகம் செய்வதற்காக நானும் உடன் வேலை பார்க்கும் நண்பர்களும் நீண்ட மேசையை சுற்றிலும் அமர்ந்திருந்தோம். டக் இன் செய்து முழுக்கை சட்டை போட்டு கண்ணாடிக் கதவை திறந்து வந்த அவனுக்கு கல்லூரியில் வெளிவந்து ஓரிரு வருடங்கள் ஆகியிருக்காது என்பது போன்ற முகம். அவனது விண்ணப்பத்தில் இதுவரை வேலை பார்த்த விபரங்களுடன் மதிப்பெண் விபரங்களும் குறிப்பிடப்பட்டிருந்ததால், அவன் வேலைக்குப் புதியவன் என்று ஏற்கனவே அனுமானித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் அனுபவம்…

  • கண்ணீரின் ஊற்றுக்கள்

    கண்ணீரின் ஊற்றுக்கள்

    சின்ன அக்காவின் காலில் சிறிதாக ஒரு கொப்புளம் முளைத்திருந்தது. பத்தாம் வகுப்புப் படிக்கும் குறும்புச் சிறுவனாக நான், “நம்ம தாத்தாவுக்கு இப்படித்தான் கொப்புளம் வந்தது, அப்படியே பெரிதாகி, பெரிதாகி செத்துப்போய்ட்டார்” என்றேன்.  விளையாட்டுப் பேச்சு விபரீதமாகி சண்டையில் முடிந்தது. மூன்று பர்லாங்க் தண்ணீர் சுமக்கும் அக்காவுடன் நானும் உடன் சென்று குடம் சுமந்து தாஜா செய்தாலும், உதட்டைப் பிதுக்கிக்கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் என்னிடம் பாரா முகமாகவே இருந்தார்.  பள்ளியில்…

  • தந்தைகள் ஆமாம் தந்தைகள்

    தந்தைகள் ஆமாம் தந்தைகள்

    நீச்சல் தெரியாதவனை குதியெனச் சொல்லிவிட்டு மூழ்கி மூழ்கி மொத்தமாக மேலே போகும் முன் மூன்று முறை மேல்வருவாய்  காப்பாற்றிவிடுவேன் என கடும் நீச்சல் கற்றுக்கொடுக்க படியிறங்கி வரும் என்  அய்யா ! எக்கணமும் சிக்கனம் தேவை நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு நல்லது கெட்டதென்றால் நாம துணை நிக்கனுமென வழிநடத்துன அய்யாவின் நேரடித் தம்பி, சின்னய்யா ! யாருக்கு எங்க பொண்ணு பிறந்திருக்கும் இந்தப் பொண்ணுக்கு அந்த மாப்பிள்ளையென காலமெல்லாம் யோசிச்சு எனக்கும்…

  • யமுனை ஆற்றிலே

    யமுனை ஆற்றிலே

    (மறு ஆக்கம்) மும்பை மாமாவின் போனிற்காகக் காத்திருந்தேன். ஏன் எல்லோரும் அந்த மாமாவைப்போல் யோசிக்கமாட்டேன் என்கிறார்கள். அவர் ஒருவரிடமிருந்துதான், இந்த இரண்டு நாட்களாக அம்மாவிடமிருந்து திட்டுகளாக வாங்கிக்கொண்டிருக்கும் என்னைக் காப்பாற்ற முடியும். பத்தாம் வகுப்பில் , 500-க்கு 175 வாங்கிய என் அம்மா, எனது 375-ஐத் தாங்கமுடியாமல் அங்கலாயப்பட்டாள். குடியே முழுகிவிட்டதுபோல், ஒப்பாரி வைத்தாள். எனக்குப் பிடித்தப் பாட்டை  அவள் காதுபடப் பாடினால், இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று கூப்பாடு…