Category: இன்ன பிற
-

தந்தைகள் ஆமாம் தந்தைகள்
நீச்சல் தெரியாதவனை குதியெனச் சொல்லிவிட்டு மூழ்கி மூழ்கி மொத்தமாக மேலே போகும் முன் மூன்று முறை மேல்வருவாய் காப்பாற்றிவிடுவேன் என கடும் நீச்சல் கற்றுக்கொடுக்க படியிறங்கி வரும் என் அய்யா ! எக்கணமும் சிக்கனம் தேவை நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு நல்லது கெட்டதென்றால் நாம துணை நிக்கனுமென வழிநடத்துன அய்யாவின் நேரடித் தம்பி, சின்னய்யா ! யாருக்கு எங்க பொண்ணு பிறந்திருக்கும் இந்தப் பொண்ணுக்கு அந்த மாப்பிள்ளையென காலமெல்லாம் யோசிச்சு எனக்கும்…
-

யமுனை ஆற்றிலே
(மறு ஆக்கம்) மும்பை மாமாவின் போனிற்காகக் காத்திருந்தேன். ஏன் எல்லோரும் அந்த மாமாவைப்போல் யோசிக்கமாட்டேன் என்கிறார்கள். அவர் ஒருவரிடமிருந்துதான், இந்த இரண்டு நாட்களாக அம்மாவிடமிருந்து திட்டுகளாக வாங்கிக்கொண்டிருக்கும் என்னைக் காப்பாற்ற முடியும். பத்தாம் வகுப்பில் , 500-க்கு 175 வாங்கிய என் அம்மா, எனது 375-ஐத் தாங்கமுடியாமல் அங்கலாயப்பட்டாள். குடியே முழுகிவிட்டதுபோல், ஒப்பாரி வைத்தாள். எனக்குப் பிடித்தப் பாட்டை அவள் காதுபடப் பாடினால், இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று கூப்பாடு…
-

போடி லூசு
(மறு பிரசுரம்) அன்று அம்மா தினம். அம்மாவிற்கு, நான் அம்மாதின வாழ்த்தோ, ஒரு சின்னப் பரிசோ கொடுக்காதது பற்றிச் செல்லக் கோபம். எனக்கோ அம்மாவின் மீது கோபம். அம்மாவிற்குத்தெரியும், எனது கோபத்திற்குக் காரணம், மாலதிக்கு அவள் அம்மாதின வாழ்த்துச் சொல்லவில்லை என்பதுதான். எனக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்த மாலதி என்னும் ஆசிரியரை அழைத்து, அம்மாதினத்தன்று கூப்பிட்டு, ” அம்மாதின வாழ்த்துக்கள்” சொன்னால், “போடி லூசு” என்றாள். “நீ என்றைக்கு மாலதியைக் கூப்பிட்டு…
-

ஆறு வார்த்தைகளில் கதைகள் (எண்ணங்கள்)
(மறுபிரசுரம்) ஏர்னெஷ்ட் ஹெமிங்க்வே, கற்றுக்கொடுத்த வழியில், சில வருடங்களுக்கு முன்னர், ஆறு வார்த்தைகளில் கதைகள் என்று, எனக்கென்று இருக்கும் ரசிகர்களுக்கு, தமிழில் எழுதி வந்தேன். அவைகளைக் கதைகள் என்று சொல்லலாமா, வெற்று எண்ணங்கள் என்று வகைப்படத்தலாமா, காலம் கடந்து அவைகள் நிற்குமா, நிற்காதா , இலக்கியமா என்று கேள்விகள் கேட்டால், அதை விமர்சகர்களிடமும், வாசகர்களிடமும் விட்டுவிடுகிறேன். எனக்கிருந்த ஒரு குழப்பம், இன்றைய வாழ்க்கையை பிற்காலத்தில் வாசிப்பவன் படித்தால், அது அவ்வளவு…
-

சீண்டும் துன்பத்தைத் தவிர்ப்போம்
(மறு பிரசுரம் ) அந்தக் கொடுமை நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும், ஒரு பார்வையாளனாகத்தான் நான் இருந்திருக்கிறேன். வேடிக்கைமட்டும் பார்த்துக்கொண்டு,ஒரு கையாளாகாதவன்போல், நின்றுகொண்டிருந்த என்னைப்பற்றி, ஜோசப் என்ன நினைத்து இருப்பான். என்மேல், கண்டிப்பாக கோபப்பட்டிருப்பான். அவனுக்கு அந்தக்கொடுமை நடக்கும் நாட்கள் நடந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இன்று நினைத்தாலும் எனக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து போகிறது. நாம் ஏதாவது செய்திருக்க வேண்டுமோ என்று. நான் அப்பொழுது கலிபோர்னியாவில் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள்…