Category: பயணம்

  • கதை சொல்லும் ஓவியங்கள்

    கதை சொல்லும் ஓவியங்கள்

    வாடிகன் அருங்காட்சியகத்தில், ஓவியங்களை பார்த்து அதிசயத்திருந்த நாங்கள், மைக்கேல் அஞ்செலோ வாழ்ந்த ஊரான ஃப்ளொரன்ஸில் அவர் வடிவமைத்த சிலையை பார்க்க முடியாமல் போன ஏமாற்றம், எல்லாம் சேர்ந்து வெனிஸில் ஒரு அருங்காட்சியகத்தையாவது முழுக்கு முழுக்க நிதானமாக பார்க்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தோம். வெனிஸ் சென்றும் சேராததுமாக, Gallerie Academia-விற்கு முன்பதிவு செய்வதற்கான முயற்சிகளை எடுத்தோம்.  இணையத்தில் பதிவு செய்வதில் இருந்த இன்னல்களை கடக்கமுடியாத நிலையில் , நாங்கள் தங்கியிருந்த விடுதியினரை…

  • வாடிகன் அருங்காட்சியகத்தில் சிங்கமுக அன்னை

    வாடிகன் அருங்காட்சியகத்தில் சிங்கமுக அன்னை

    ரோம் நகரமென்றால், “You too, Brutus”  என்று பிரபலமான வசனத்தின் மூலமாக தெரிந்திருந்த ஜூலியஸ் சீசரையும், அவரைக் கொன்ற நண்பர்களையும், சீசரின் காதலியான கிளியோபாட்ராவையும், எகிப்து இத்தாலிக்கான வரலாற்றையும் மேலும் அறிந்துகொள்ள கிளியோ பாட்ரா, ஜூலியஸ் சீசர் வரலாற்றைச் சொல்லும் படங்களை ஆவணங்களை பயணத்தின் முன் தயாரிப்பாகப் பார்த்தோம். மைக்கேல் அஞ்செலோவின் கலைப் படைப்புகளையும் அங்கு பார்க்கவிருக்கிறோம் என்பதை அறிந்திருந்தும், முன்கூட்டியே அனுமதிச் சீட்டை வாங்காததால், Florence-ல் அவரது ஆகச்சிறந்த…

  • பசிக்கும்லே

    பசிக்கும்லே

    ராதாவிற்கு ஒரே கவலை. கோழிக்கறிகூட சாப்பிடாத விரதத்தில் இருக்கும் நாம் இத்தாலி பயணத்தில் பத்து நாட்கள் வெறும் மரக்கறி உணவாக சாப்பிட்டு எப்படி சமாளிப்பது என.  பிஸ்ஸா அவருக்குப் பிடித்த உணவெனினும், பத்து நாட்களுக்கு மனுஷன் அதை மட்டும் சாப்பிட்டிக்கிட்டிருந்தா நாக்கு செத்துப்போகாதா என்ற கவலை. சஹா , “பிஸ்ஸா இங்கு சாப்பிடுவதுபோல இருக்காது. அங்கு வேறு மாதிரி சுவையாக இருக்கும். இங்கு கொத்து பராட்டோ சாப்பிடுவதற்கும், தமிழ்நாட்டில் கொத்து…

  • நம்மவர் உழைப்பாளிகள்

    நம்மவர் உழைப்பாளிகள்

    அயல் நாட்டில் நடக்கும் சமயம், நம்மைப் போன்றவர்களை, நாம் அறியாமலேயே நம் கண்கள் தேடும். கால்களை அகற்றி வைத்து நின்றிருந்தாலும் சரி  , ஒட்டி வைத்து நின்றிருந்தாலும் சரி நம்மவர் என்று அடையாளம் காண அவ்வளவு நேரம் பிடிக்காது.  எதிர் கொண்டு நடந்தால், அவர் முறைக்கும் முறைப்பில் நம்மவர் என இனம் கண்டுவிடமுடியும். இதில் அத்தி பூத்தாற்போல் சிரிப்பவர்களும் உண்டு. எனது அண்மைப் பயணமான இத்தாலி நகரங்களில், நான் கண்ட…

  • இத்தாலியில் மதாரின் மாயப்பாறை

    இத்தாலியில் மதாரின் மாயப்பாறை

    நான் குடும்ப சகிதமாக இத்தாலிக்குச் செல்கிறேன் என்று சொன்னதும், ஒருவர் விடாமல் சொன்னது, புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்றுதான். ரோம், ஃப்ளோரன்ஸ், வெனிஸ், பைசா என்று எந்த நகரில் சுற்றினாலும், எடுத்த புகைப்படங்கள்  அவ்வளவு அழகாக இருந்தன.  அந்தப் புகைப்படங்களின் அழகுக்கு காரணம் இத்தாலி நகர வீடுகளின் அழகா இல்லை ஐந்து அல்லது ஆறு மாடிக் கட்டிடங்களே உள்ள வீதிகளில் மேல் நோக்கிப் பார்த்தாலே தெரியும் நீல வானமா? எனக்கு…

  • படைப்பாளிகள் வாசகர்கள் சூழ படைப்பாளியின் திருமணம்

    படைப்பாளிகள் வாசகர்கள் சூழ படைப்பாளியின் திருமணம்

    எழுத்தாளர்  அஜிதன் அவர்களின் முதல் படைப்பான மைத்ரி நாவலே  , அவரது  அடுத்த அடுத்த  படைப்புகளை  என்னை ஒரு எதிர்பார்ப்புடன்  வாசிக்க வைத்துவிட்டன . ஒரு வாசகனாக அவரது படைப்புகளை வாசித்து அவருக்கு சிறுசிறு குறிப்புகளை எழுதி அனுப்புவேன். அவரது படைப்புகளில் ஒன்றை வைத்து ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்களுக்கு சொந்தக்காரர் என்று அன்புடன் அவரை அழைக்கும் அளவிற்கு அணுக்கம். நான் அணுக்கமாவது இருக்கட்டும்.  அஜிதனின் படைப்புகளை வாசித்த வாசகர் ஒருவர் , …