Category: சினிமா
-

சக்தித் திருமகன் – திருப்தி
என்னதான் சினிமா ஆர்வலனாக இருந்தாலும், ஒரு சினிமாவை நான் பார்ப்பதற்குப் பொழுதுபோக்கைத் தாண்டி காரண காரியங்கள் வேண்டியதாக உள்ளது. பொழுதைப் போக்க என்னிடம் ஆயிரத்து முன்னூற்றுப் பதினான்கு வழிகள் உள்ளன. வாசித்து முடிக்கவேண்டிய புத்தகங்கள் வேறு வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. அதென்ன ஆயிரத்து முன்னூற்றுப் பதினான்கு வழிகள் என்று கணக்குக் கேட்டால், அந்த எண்ணை எவ்வளவு பிரியமாகச் சொல்கிறேன் என்று கொஞ்சம் யோசித்தால் போதுமானது. செப்டம்பர் 19, 2025-ல் வெளிவந்த சக்தித் திருமகன்…
-

பரியேறும் பெருமாள் – நின்றாடும் நிஜம்
(மீள் பதிவு) மாரி செல்வராஜை , தொலைபேசியில் கூப்பிட்டு , “நான் நேற்று , பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன். எப்படி தம்பி, இப்படி ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்தீர்கள்? எல்லா பாத்திரங்களையும் எப்படி உங்களால் பார்வையாளனின் மனதிற்குள் திணிக்கமுடிந்தது?” என்று கேட்கலாம் என இருந்தேன். எனக்கு அவரை நேரடியாகத் தெரியாது என்பதால், எனக்குத் தெரிந்து திரைத்துறையில் வேலை செய்யும் நண்பன் லிவிக்கு போன் செய்து , “தம்பி, நீ…
-

கொட்டுக்காளி – யாவரும் பார்க்கலாம்
விஜய் ரெங்கராஜன் எழுதிய வெறியாட்டுக் கதையில், கதை சொல்லி ஷண்முகம், தமிழாசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இப்படி சொல்கிறான். //வேலன் வெறியாட்டு சங்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு சடங்கு முறை. தன் பெண் மெலிந்துகொண்டிருக்கிறாள் எனக் கண்டு, யாரோ ஒருவன் மீது காதல்கொண்டிருக்கலாம் என்று எண்ணி, அத்தலைவனின் நினைவை அவளிடமிருந்து அகற்றுவதற்காக செய்யும் சடங்காகும். // செயற்கை நுண்ணறிவு வந்து தன் வேலையே பறிபோகும் என பதறிக்கொண்டிருக்கும் ஒருவன், இந்த சங்ககாலச்…
-

சசிகுமார் – அன்றாடத்தின் நாயகன்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் , எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள், டாலஸ் தமிழ் சங்கவிழாவில் நடிகர் சசிகுமார் அவர்களை எனக்கும் ராதாவிற்கும் அறிமுகப்படுத்தினார். சசிகுமார் அவர்கள் ஜேம்ஸ் வசந்த், சரியான தமிழ் வார்த்தைகளை யூகிக்கும் வினாடி வினா ஒன்றை குழந்தைகளுக்காக நடத்தினார். சசிகுமார் அவர்களும் ஒரு பள்ளிச் சிறுவனைப் போல யூகித்து வடமும் இடமுமாக அமர்ந்திருந்த எங்களிடம் பகிர்ந்து சரியாக இருந்தால் புன்முறுவல் புரிந்தார். பவா, அவரது கதையாடலின்போது, தங்கள்…
-

வீர தீர சூரன் – பார்க்கவும் ரசிக்கவும்
மணி ரத்னத்தின் இயக்கத்தில் வரும் எல்லா படமும், வெற்றி மாறனின் இயக்கத்தில் வெளிவருகின்ற எல்லா படமும் என்று பார்ப்பவன் நான். அந்த வரிசையில் விக்ரம் நடித்த படம் என்றாலும் பார்ப்பவன். அப்படித்தான் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், SJ சூர்யா, நடிப்பில், தேனி ஈஸ்வரன் ஒளியமைப்பில், GV பிரகாஷ் குமார் இசையமைப்பில், வெளிவந்துள்ள “வீர தீர சூரன்” சினிமா-வை அமேசான் பிரைமில் பார்த்தேன். படம் விறுவிறுப்பாக…
-

எண்களின் உலகம் – அதிபெரும் பந்தயம்
(மறு பிரசுரம்) எனக்கு அப்படி ஒரு பழக்கம். யாருடனாவது போனில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , ஜன்னலில் இருக்கும் பிளைண்ட்ஸை திறப்பதும் மூடுவதுமாக இருப்பேன். அந்தச் செயல் எப்படி என்னை ஒற்றிக் கொண்டது என்று தெரியவில்லை. ஒரு வேளை பேசும் விஷயம் ஆர்வம் உள்ளதாக இருந்தால் அப்படிச் செய்வேனாக இருக்கும். அப்படித்தான் 2006 செப்டம்பர் மாதத்தின் ஒரு மதிய வேளையில், புதிததாக வீடு வாங்கிய நண்பர் ஒருவர், போனில் அவர் தனது புதிய…
-

ஏலே – பார்க்கலாம் மீண்டும் பார்க்கலாம்
(மறு பிரசுரம்) ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் கூட்டணியில் இருந்த சிலர், இணைந்து இன்னொரு இனிப்பான படத்தைக் கொடுத்துள்ளனர். நான்கு குறும்படங்கள் கொண்ட அந்தப் படத்தில், ஒன்றான ‘காக்கா கடி’ கதையில் காதலன் முகிலனாக வந்த மணிகண்டன் இந்தப் படத்தில் பார்த்தி. அப்பா இறந்த செய்தி கேட்டு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர்கூட வரவில்லையென அவரே கதை சொல்ல படம் ஆரம்பம். வீட்டில் அப்பாவின் பிணம் இருக்க பக்கத்து ஊருக்கு பஸ் ஏறிச்…
-

பாத்திரங்களாக மாறிவிட்ட நட்சத்திரங்கள்
(மறு பிரசுரம்) பள்ளி , தேர்வு, செய்யும் வேலை இப்படி விட்டுவிட்டு சில படங்களை சினிமா ஆர்வலனாக வெளியிட்ட அன்றே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் பொன்னியின் செல்வன் – 2 பார்த்தது ஒரு பள்ளிக்கால அனுபவம். ஏப்ரல் 27 அமெரிக்க மாலை நான்கு மணிக்கு முதல் காட்சிக்கு (இந்தியாவில் ஏப்ரல் 28-ன் காலைக் காட்சி ஆரம்பிக்குமுன்) சென்று பார்த்தேன். ஆரம்பக் காட்சியே, ஆதித்த கரிகாலன் நந்தினியின் பதின்பருவக் காதல், ஒரு…
-

பொன்னியின் செல்வன் – காட்சிவடிவ வெற்றி
(மறு பிரசுரம்) ‘பொன்னியின் செல்வன்’ படம் எப்பொழுது தியேட்டருக்கு வரும் என்று காத்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன். படம் பார்ப்பதற்கு முன்னர் , கல்கியின் நாவலை வாசித்து தன்னை தயார் செய்துகொண்டவர்களில் ஒருவன். ‘பொன்னி நதி பாக்கனுமே’ பாடல் வெளிவந்த நாள் முதல், அலுவலகம் செல்லும் ஆறு மைல் பயணத்தில் தினமும் இரண்டு முறை, அதைக் கேட்பவன். இத்தனைக்கும் பிறகு, முதல்முறை படம் பார்த்தபொழுது, ஏதோ ஒன்று இல்லாததைப்போல உணர்ந்தேன்.…
-

மாமன்னன் – மனதைத் தொடுகிறார்
(மறு பிரசுரம்) நாய், பன்றி, மனிதன் என எல்லா உயிர்களின் இரத்தமும் திரையையும் தாண்டி எதிரில் இருக்கும் ரசிகன் மேல் தெறிக்கும் அளவுக்கு இரத்தம். அதனால் ஒவ்வாமை வந்து ஒதுக்கிவிட்டோம் என்றால், ஒரு நல்ல படத்தைப் பார்க்கத் தவறவிட்டுவிடுவோம். இரத்தம் சிதற வைக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ்தான், பன்றியை ரசிக்கும் நாயகனையும் அறிமுகப்படுத்துகிறார். அவரே பன்றிகளை பாசத்துடன் வளர்க்கும் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்), பன்றிகளை நாய்களைவிட்டு குதறவைக்கும் ரத்னவேல் (பகத்…