-

நம்மவர் உழைப்பாளிகள்
அயல் நாட்டில் நடக்கும் சமயம், நம்மைப் போன்றவர்களை, நாம் அறியாமலேயே நம் கண்கள் தேடும். கால்களை அகற்றி வைத்து நின்றிருந்தாலும் சரி , ஒட்டி வைத்து நின்றிருந்தாலும் சரி நம்மவர் என்று அடையாளம் காண அவ்வளவு நேரம் பிடிக்காது. எதிர் கொண்டு நடந்தால், அவர் முறைக்கும் முறைப்பில் நம்மவர் என இனம் கண்டுவிடமுடியும். இதில் அத்தி பூத்தாற்போல் சிரிப்பவர்களும் உண்டு. எனது அண்மைப் பயணமான இத்தாலி நகரங்களில், நான் கண்ட…
-

இத்தாலியில் மதாரின் மாயப்பாறை
நான் குடும்ப சகிதமாக இத்தாலிக்குச் செல்கிறேன் என்று சொன்னதும், ஒருவர் விடாமல் சொன்னது, புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்றுதான். ரோம், ஃப்ளோரன்ஸ், வெனிஸ், பைசா என்று எந்த நகரில் சுற்றினாலும், எடுத்த புகைப்படங்கள் அவ்வளவு அழகாக இருந்தன. அந்தப் புகைப்படங்களின் அழகுக்கு காரணம் இத்தாலி நகர வீடுகளின் அழகா இல்லை ஐந்து அல்லது ஆறு மாடிக் கட்டிடங்களே உள்ள வீதிகளில் மேல் நோக்கிப் பார்த்தாலே தெரியும் நீல வானமா? எனக்கு…
-

எண்களின் உலகம் – அதிபெரும் பந்தயம்
(மறு பிரசுரம்) எனக்கு அப்படி ஒரு பழக்கம். யாருடனாவது போனில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , ஜன்னலில் இருக்கும் பிளைண்ட்ஸை திறப்பதும் மூடுவதுமாக இருப்பேன். அந்தச் செயல் எப்படி என்னை ஒற்றிக் கொண்டது என்று தெரியவில்லை. ஒரு வேளை பேசும் விஷயம் ஆர்வம் உள்ளதாக இருந்தால் அப்படிச் செய்வேனாக இருக்கும். அப்படித்தான் 2006 செப்டம்பர் மாதத்தின் ஒரு மதிய வேளையில், புதிததாக வீடு வாங்கிய நண்பர் ஒருவர், போனில் அவர் தனது புதிய…
-

ஆறு வார்த்தைகளில் கதைகள் (எண்ணங்கள்)
(மறுபிரசுரம்) ஏர்னெஷ்ட் ஹெமிங்க்வே, கற்றுக்கொடுத்த வழியில், சில வருடங்களுக்கு முன்னர், ஆறு வார்த்தைகளில் கதைகள் என்று, எனக்கென்று இருக்கும் ரசிகர்களுக்கு, தமிழில் எழுதி வந்தேன். அவைகளைக் கதைகள் என்று சொல்லலாமா, வெற்று எண்ணங்கள் என்று வகைப்படத்தலாமா, காலம் கடந்து அவைகள் நிற்குமா, நிற்காதா , இலக்கியமா என்று கேள்விகள் கேட்டால், அதை விமர்சகர்களிடமும், வாசகர்களிடமும் விட்டுவிடுகிறேன். எனக்கிருந்த ஒரு குழப்பம், இன்றைய வாழ்க்கையை பிற்காலத்தில் வாசிப்பவன் படித்தால், அது அவ்வளவு…
-

புண் உமிழ் குருதி – அசோகமித்திரன்
(மறுபிரசுரம்) எழுத்தாளர் பவா செல்லத்துரை , புத்தகங்கள் அலமாரியில் சீராக அடுக்கப்படாமல், சமையலறை, படுக்கையறை , வரவேற்பறை என்று அங்கங்கே இறைந்துகிடப்பதுதான் அழகு என்று நிலம் நாவலில் , ‘இழப்பின் வலி’ கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவர் சொன்னதுபோல், எங்கள் வீட்டில் சமையலறை, படுக்கையறை மற்றும் வரவேற்பறை என்று இறைந்துகிடக்கும் புத்தகங்களில் ஒன்று அசோகமித்திரனின், ‘புண் உமிழ் குருதி’ எனும் சிறுகதை தொகுப்பு. அப்படி இருப்பதால்தான் அதில் இருக்கும் இருபத்து ஏழு…
-

நான் படித்த புத்தகங்கள்
விருந்தினராக நாம் அமெரிக்கா சென்றால், முக்கியமான ஒரு பிரச்சினை, எப்படி பொழுதுபோக்குவது என்பது. குழந்தைகள் அலுவலகமோ, படிக்கவோ சென்று விடுவார்கள். வீட்டில் இருக்கும் மகனோ, மருமகளோ அவர்களுக்கென்று ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சமயத்தில் நமக்கு உதவியாக இருப்பது, சன்-டிவி , கம்ப்யூட்டர் போன்றவைதான். கொஞ்சம் ஆங்கிலம் பழக்கப்பட்டவர்கள், கம்ப்யூட்டரில் பேப்பர் படிக்கலாம். கதைகள் , செய்திகள் படிக்கலாம். இந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது, எனது படிக்கும்…
-

பன்னாட்டுக்காரனின் கதைகள்
12/30/2024-ன் மாலை, எனக்கு ஒரு இனிதான மாலையாகியது. இரு மலைகளுக்கு நடுவே ஆதவன் சென்று மறையும் அந்தியைக் காணும்பொழுது வரும் அதே உவகை , ஜெகதீஸ் குமாரின் , “நிமித்தம்” சிறுகதையை அகழ் இதழில் வாசித்தபொழுது அடைந்தேன். அசோகமித்திரன் ஒரு முன்னுரையில் சொல்லியிருப்பார், “நான் இந்தக் கதைகளை எழுதும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தேன், வாசிக்கும் நீங்களும் அதே மகிழ்வை அடைவீர்கள் “ என. அந்த மகிழ்வை “நிமித்தம்” எள்ளளவும் குறையாமல் கொடுத்தது.…
-

சுஜாதாவின் நினைவில் மலரும் கற்றவை
(மறுபிரசுரம்) சில நாட்கள் அப்படி நடந்துவிடும். ஒன்றும் திட்டமிடாமலே ஒவ்வொன்றும் ஒரே மாதிரி சொல்லிவைத்ததுபோல் நடக்கும். நவம்பர் 30, 2021 – எனக்கு அப்படித்தான். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் ஞாபகமாகவே இருந்தது. என்னிடம் இருந்த அவர் எழுதிய நூல்களில், தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி – உயிர்மை பதிப்பகம்) எடுத்தேன். தொகுப்பில் இருந்த ஐம்பது கதைகளில் ஒவ்வொன்றாக விரல் வைத்து, ‘ரேணுகா’, ‘நகரம்’, ‘அரிசி’ போன்ற கதைகள் நேற்றுத்தான் வாசித்ததுபோல்…
-

ஏலே – பார்க்கலாம் மீண்டும் பார்க்கலாம்
(மறு பிரசுரம்) ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் கூட்டணியில் இருந்த சிலர், இணைந்து இன்னொரு இனிப்பான படத்தைக் கொடுத்துள்ளனர். நான்கு குறும்படங்கள் கொண்ட அந்தப் படத்தில், ஒன்றான ‘காக்கா கடி’ கதையில் காதலன் முகிலனாக வந்த மணிகண்டன் இந்தப் படத்தில் பார்த்தி. அப்பா இறந்த செய்தி கேட்டு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர்கூட வரவில்லையென அவரே கதை சொல்ல படம் ஆரம்பம். வீட்டில் அப்பாவின் பிணம் இருக்க பக்கத்து ஊருக்கு பஸ் ஏறிச்…
-

பாத்திரங்களாக மாறிவிட்ட நட்சத்திரங்கள்
(மறு பிரசுரம்) பள்ளி , தேர்வு, செய்யும் வேலை இப்படி விட்டுவிட்டு சில படங்களை சினிமா ஆர்வலனாக வெளியிட்ட அன்றே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் பொன்னியின் செல்வன் – 2 பார்த்தது ஒரு பள்ளிக்கால அனுபவம். ஏப்ரல் 27 அமெரிக்க மாலை நான்கு மணிக்கு முதல் காட்சிக்கு (இந்தியாவில் ஏப்ரல் 28-ன் காலைக் காட்சி ஆரம்பிக்குமுன்) சென்று பார்த்தேன். ஆரம்பக் காட்சியே, ஆதித்த கரிகாலன் நந்தினியின் பதின்பருவக் காதல், ஒரு…