-

அழகியை அறிய மூன்று நூல்கள்
சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய சங்ககாலப் புலவர்கள், வெள்ளைக்குடி நாகனார், கோவார் கிழார் முதல், ராஜ ராஜ சோழனின் கதையை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் காட்சி வடிவமாக்கிய மணி ரத்னத்தின் படத்திற்கு பாட்டு எழுதிய கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் வரை அவளைப் பற்றிப் பாடுவதும் எழுதுவதும் தொடர்கிறது. அவள் சரித்திரத்தைப் பாடுவது என்பது தமிழர்களின் வரலாற்றைப் பாடுவது. அவளின் கதையை எழுதினால், அது தமிழர்களின்…
-

நானெனும் நீயும் நீயெனும் நானும்
கமலதேவியின் சீதா, துறையூரில் இறங்கி , பனிக்காலம் முடித்த புதுவெயிலில் கொடுத்த எரிச்சலில் கைக்குட்டையையெடுத்து முகத்தைத் துடைக்க, கதையின் உள்சென்றுவிட்ட வாசகன் சௌந்தர் உளப்பூர்வமாக சீதாவைத் தொடர, யாரோ தன் முன்னர் நிற்பதுபோல் மாயையெனத் தோன்ற நிமிர்ந்து பார்த்தார். கடுகைப்போட்டால் வெடிக்கும் என்ற முகத்துடன் கொதி நிலையில், மேலாளர் சௌந்தர் நின்றார். வா. சௌந்தர் : என்னங்க சார் ? மே. சௌந்தர் : எத்தனை நாளைக்குத்தான் கமலதேவி கதைகளையே…
-

வாழ்வெனும் நெய்யில் புரட்டிய வண்டல்
“ஏம்மா, இப்பல்லாம், நெய் காய்ச்சுனா முருங்கை இலையே போடறதில்ல” என்றேன் ராதாவிடம். “இந்தக் கோபி முருங்கைக் கீரை கொண்டு வந்து கொடுத்தாலும் கொடுத்தார், எப்ப பார்த்தாலும் முருங்கை முருங்கைனு பேசிக்கிட்டு, எழுதிக்கிட்டு. ஒண்ணு பண்ணுங்க, உங்க தங்கச்சி சித்ராவ டிக்கட் போட்டுக் கூட்டிக்கிட்டு வாங்க. தம்பி கோபிய வாரா வாரம் முருங்கைக் கீரை, காய்னு கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க. அவங்களாச்சு, நீங்களாச்சு. நானே சமைச்சு சாப்பிட்டு எனக்கும் நாக்குச்…
-

தங்கையின் கைப்பக்குவம்
ஞாயிற்றுக்கிழமை காலை. இளையராஜா இசை வீடு முழுக்க காற்றென நிறைந்தது. whatsapp-ல் ஒரு அழைப்பு. “என்னக்கா, பண்ணிக்கிட்டிருக்கீங்க… “ சித்ரா “முருங்கைக் கீரையை, யூஸ்வலா, இந்தியன் ஸ்டோர்ல வாங்குவோம். முத்தன இலையா இருக்கும். இது சான் ஆண்ட்னியோ ஃப்ரெண்ட் கோபி, அவரு வீட்டுத் தோட்டத்திலிருந்து கொடுத்தது. கொழுந்து இலையா நல்லா இருக்கு . ஒவ்வொண்ணா பிய்க்கறதுக்குத்தான் கடியா இருக்கு… “ ராதா “ஒவ்வொண்ணா எவ்ளொ நேரம் அக்கா பிய்க்கிறது. அப்படியே…
-

பொய் சத்தியம் செய்தவளே, நீ வரவில்லை
அவனை நேர்முகம் செய்வதற்காக நானும் உடன் வேலை பார்க்கும் நண்பர்களும் நீண்ட மேசையை சுற்றிலும் அமர்ந்திருந்தோம். டக் இன் செய்து முழுக்கை சட்டை போட்டு கண்ணாடிக் கதவை திறந்து வந்த அவனுக்கு கல்லூரியில் வெளிவந்து ஓரிரு வருடங்கள் ஆகியிருக்காது என்பது போன்ற முகம். அவனது விண்ணப்பத்தில் இதுவரை வேலை பார்த்த விபரங்களுடன் மதிப்பெண் விபரங்களும் குறிப்பிடப்பட்டிருந்ததால், அவன் வேலைக்குப் புதியவன் என்று ஏற்கனவே அனுமானித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் அனுபவம்…
-

கண்ணீரின் ஊற்றுக்கள்
சின்ன அக்காவின் காலில் சிறிதாக ஒரு கொப்புளம் முளைத்திருந்தது. பத்தாம் வகுப்புப் படிக்கும் குறும்புச் சிறுவனாக நான், “நம்ம தாத்தாவுக்கு இப்படித்தான் கொப்புளம் வந்தது, அப்படியே பெரிதாகி, பெரிதாகி செத்துப்போய்ட்டார்” என்றேன். விளையாட்டுப் பேச்சு விபரீதமாகி சண்டையில் முடிந்தது. மூன்று பர்லாங்க் தண்ணீர் சுமக்கும் அக்காவுடன் நானும் உடன் சென்று குடம் சுமந்து தாஜா செய்தாலும், உதட்டைப் பிதுக்கிக்கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் என்னிடம் பாரா முகமாகவே இருந்தார். பள்ளியில்…
-

புனைவின் நடை வாசிப்பிற்கு ஒரு தடையா?
அசோகமித்திரனால் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ‘மலை மேல் நெருப்பு’ என்ற நாவலை சமீபத்தில் வாசித்தேன். அசோகமித்திரனின் பெயர் இருந்ததால் மட்டுமே முழு நாவலையும் வாசித்தேன். வாசிப்பின் பெரும் தடையாக இருந்தது நடை. மென்மையான மொழியில் கதை நெய்யும் அசோகமித்திரனின் நடையை நாவலில் காணோம். காதருகே வந்து கிசுகிசுப்பாக கதை சொல்லும் அவர் குரலை இனம் காண முடியவில்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்படும் நூல்களுக்கே உள்ள ஒரு பொதுவான…
-

சமகாலப் பிரச்சனையை விவாதிக்கும் ஓர் ஆய்வு நூல்
நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் பாவக்கதைகள் படத்தைப் பார்த்துவிட்டு, இப்படியும் அப்பாக்கள் இருப்பார்களா, இதைப் போன்ற ஆணவக்கொலைகள் இன்றும் நடக்கின்றனவா என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே சினிமாப் பார்க்கும் வசதி உள்ள இந்த நாளில், என்றாவது ஒரு நாள் செய்தியாக வரும் விஷயங்களை, என்னமோ அன்றாடும் நடக்கும் விஷயம்போல் படம் எடுத்திருப்பது, தவறான செய்தியைப் பரப்பவது போல் ஆகிறது என்று எழுதப்படும் விமர்சனங்கள். இவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக, சினிமாவை அரசியல்…
-

பரியேறும் பெருமாள் – நின்றாடும் நிஜம்
(மீள் பதிவு) மாரி செல்வராஜை , தொலைபேசியில் கூப்பிட்டு , “நான் நேற்று , பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன். எப்படி தம்பி, இப்படி ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்தீர்கள்? எல்லா பாத்திரங்களையும் எப்படி உங்களால் பார்வையாளனின் மனதிற்குள் திணிக்கமுடிந்தது?” என்று கேட்கலாம் என இருந்தேன். எனக்கு அவரை நேரடியாகத் தெரியாது என்பதால், எனக்குத் தெரிந்து திரைத்துறையில் வேலை செய்யும் நண்பன் லிவிக்கு போன் செய்து , “தம்பி, நீ…
-

தந்தைகள் ஆமாம் தந்தைகள்
நீச்சல் தெரியாதவனை குதியெனச் சொல்லிவிட்டு மூழ்கி மூழ்கி மொத்தமாக மேலே போகும் முன் மூன்று முறை மேல்வருவாய் காப்பாற்றிவிடுவேன் என கடும் நீச்சல் கற்றுக்கொடுக்க படியிறங்கி வரும் என் அய்யா ! எக்கணமும் சிக்கனம் தேவை நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு நல்லது கெட்டதென்றால் நாம துணை நிக்கனுமென வழிநடத்துன அய்யாவின் நேரடித் தம்பி, சின்னய்யா ! யாருக்கு எங்க பொண்ணு பிறந்திருக்கும் இந்தப் பொண்ணுக்கு அந்த மாப்பிள்ளையென காலமெல்லாம் யோசிச்சு எனக்கும்…