-

எல்லாம் நன்மைக்கே
ஓங்கிய மரமொன்றை வழியில் கண்டால் நீர்தேடிச் செல்லும் அதன் வேர்கள் எதுவரை சென்றுள்ளன என விசாரிப்போம் ! நதியோடு நதியாக இணைந்து செல்லும் பாதையில் நடப்போம் ! சலசலவென அது சொல்லும் கடந்துவந்த கதை கேட்போம்! மெய்மறந்து அமைதி காக்கும் நதியாயின் அப்படியே ஆகட்டும் என்று உடன் பயணிப்போம். மலை ஏறுவோம் ஏறிய மலையில் பறவைகள் சாப்பிட்டது போக மீதியிருக்கும் பழங்களை சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிடுவோம். புலி கரடி வந்தால் …
-

பெயரை அழைப்பதில் இருக்கிறது – நட்சத்திர உரையாடல்
என்றுமில்லாத திரு நாளாக, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வானத்தைப் பார்த்தால், அப்பா நட்சத்திரத்தின் அருகில் இருக்கும் அம்மா நட்சத்திரத்தைக் காணோம். என்றைக்கும் விட இன்றைக்கு அப்பா நட்சத்திரத்தை சுற்றிலும், பெரும் நட்சத்திரங்களின் கூட்டம். அத்தனை நட்சத்திரங்களும், என்னைப் பார்த்து கண் சிமிட்டின. என்னிடம் அவைகளுக்கு சொல்வதற்கு நிறைய இருக்கிறது என்று எத்தனித்தன. “அய்யா, எங்க அம்மாவைக் காணோம்? “ என்றேன். “நீ , என் பேரு சொல்லி எழுதிட்டேனு…
-

பெயரை அழைப்பதில் இருக்கிறது
அப்பா, தகப்பா, வரதப்பா, பிறந்த நேரம், நட்சத்திரம் குறிப்பிட்டு, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யாராவது உங்களிடம் யோசனை கேட்டால், பெயரில் என்ன இருக்கிறது ? கோடீஸ்வரன் என்று பெயர் வைத்தால் போதுமா, உழைச்சாத்தான பணக்காரனாக முடியும் என்பீர்கள். உங்க அப்பா சொன்னார் என்று எனக்கு சௌந்தரராஜன் என்று பெயர் வைத்தீர்கள். பௌதியம்மன் கோவில் திருவிழாவில் வாங்கியிருந்த ‘பட்டிக்காடா பட்டணமா’ பாட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, வீட்டின் முன்னால் கட்டியிருந்து…
-

போங்கடா நீங்களும் உங்க AI-யும்
வீட்டை வாடகைக்கு விடும் முதலீட்டாளர்களுக்கு இது தெரிந்திருக்கலாம். கேஸ், தண்ணீர், எலெக்ட்ரிசிட்டி வகையறா வகையறாவிற்கு லேண்ட் லார்ட் கணக்கு என்று ஒன்று வீட்டின் உரிமையாளர் வைத்துக்கொள்ளலாம். வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டைக் காலி பண்ணினால், யுடிலிட்டி கணக்குத் தானாக வீட்டு உரிமையாளருக்கு மாறிவிடும். அடுத்துப் புதிதாக ஒருவர் குடிவந்துவிட்டால், அவர் அழைத்துச் சொன்னால் , அவரது பெயருக்கு மாறிவிடும். வீட்டில் யாரும் குடியில்லாதபொழுது உரிமையாளர்தான் பில் கட்டவேண்டும். என் நண்பர் ஒருவருக்கு…
-

G.D.N – இன்றைய தேவை
பனிரெண்டாம் வகுப்பில் எனக்கு இயற்பியல் பாடம் நடத்திய நரசிம்மன் வாத்தியார், பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களில், அவர் சொல்லும் கதைகளாலும், உதாரணங்களாலும் 20 சதவீதமே நடத்தி முடித்தார். பாடத்திட்டத்தை முடிக்காமல் அவர் சொல்லும் நீளும் கதைகளில் GD நாயுடு குறித்த நிகழ்வுகளும் உண்டு. ஏற்கனவே மெத்தப்படித்த இஞ்சினியர்களாக இருந்தாலும், GD நாயுடுவிடம் பாடம் படிக்க வருவார்களாம். அந்த வகுப்பறையில் ‘என்னைத் தொடாதே’ என்ற குறிப்புடன் ஒரு பொம்மை இருக்குமாம். ஒவ்வொரு மாணவருமே,…
-

நிலவைச் சுட்டும் விரல் – உரையாடலுக்கான தளம்
இரண்டு வருடங்களுக்கு முன் , டொரண்டாவில் தன் மகன் dரவிந்தன் வீட்டிற்கு வந்திருந்த யுவன் சந்திரசேகரை சந்திப்பதற்கும், அவருடன் சில நாட்கள் தங்கி அவரது அறிவை எப்படியாவது கேட்டு வாங்கிவந்துவிடவேண்டுமென்றும், அமெரிக்காவிலிருந்து ராதா, சஹா, பழனி ஜோதி, மஹேஷ்வரி. நான் என பட்டாளமாகச் சென்றிருந்தோம். Airbnb-யில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து , அரவிந்தனிடம் கடன் வாங்கி, யுவனை எங்களுடன் இரண்டு நாள் தங்கவைத்துக்கொண்டோம். கனடாவிலிருந்து நண்பர் வெங்கட் பிரசாத்தும்,…
-

அறிவுக் கொடை கொடுத்த நாயகிக்கு அஞ்சலி
ரீபா தொடரில் ரீபா, டாலி மேஜர்ஸ் எனும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம், வேலை பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவார். இரண்டு நாட்களில் அவருடனான நேர்முகம் இருக்க, டாலி மேஜர்ஸ் ரீபா-வின் வீட்டிற்கு நேரிலேயே வந்துவிடுவார். அந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வுருபவர் டாலி பார்டன். தன் வீட்டில் தனது கனவு நாயகியை பார்த்த ரீபாவிற்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அந்த ரீபாவின் உணர்வுடனும் படபடப்புடனும் தான், டாலி பார்டனுடன் பாடும்…
-

இலக்கிய வாசகனின் தொடர் கவனத்தில் இருக்கவேண்டிய இலக்கிய விழா
நான்கு தென்னிந்திய மொழிகளின் படைப்புகளையும் படைப்பாளுமைகளையும் கொண்டாடவும் சிறப்பிக்கவும் பெங்களூரில் 2024 ஆகஸ்ட் 9,10, 11, தேதிகளில் Book Brahma Literature Festival முதன் முதலாக நடந்தேறியது. ஆரம்பமே அட்டகாசம் எனும் வகையில், அந்த விழாவிற்கே உரித்தான தனித்தன்மையால் இலக்கிய ஆர்வலர்களை ஈர்த்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் சுழற்சி முறை அடிப்படையில் ஒரு மொழிக்கான வாழ் நாள் சாதனையாளர் விருதை வழங்குவது. மூன்று நாட்களில்…
-

Snake-Eater – ஓர் அலசல்
உள்ளத்தால் ஒடுங்கிவிட்ட, வெளியாருடன் பேசத் தயங்கும், எந்த நேரமும் அடுத்து என்ன நடக்குமோ என்று கவலைப்படும் என்னை அப்படியே பிரதிபலிக்கிறாள் இந்த நாவலின் கதாநாயகி செலீனா, என்று T.Kingfisher-ன் Snake-Eater நாவல் குறித்து அதிமிகு புனைவுகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர் பாராட்டிப் பேசினார். Kingfisher நாவலை ஒன்று விடாமல் வாசிக்கும் வாசகர் என்பதால் அப்படிச் சொல்கிறார் என்று என்னால் அவரது கூற்றை ஒதுக்கிவிடமுடியவில்லை. நல்ல வாசகர் அவர். அதிமிகு புனைவுகள்…
-

தலைவர் தம்பி தலைமையில் – வழமையிலிருந்து விலகிய படம்
தமிழின் முதல் நாவலான, மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தில், கதாநாயகன் பிரதாப முதலிக்கும் அவரது மாமன் பெண் ஞானம்பாளுக்கும் நிச்சயக்கப்படவிருக்கும் திருமணம், ஞானம்பாளின் அப்பா, மாப்பிள்ளை திருமணத்திற்குப் பிறகு பெண்வீட்டில்தான் தங்கவேண்டும் என்று சொல்ல, திருமணம் நின்று விடும். பிறகு பிரதாப முதலியாரின் தகப்பனாரும், ஞானம்பால் தகப்பனாரும் ஆணவத்தினால் வெவ்வேறு இடத்தில் சம்பந்தம் பேசி ஒரே நாளில், பூங்காவூர் என்ற ஊரில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வீட்டில்…