• தெரிந்தது இரண்டு தெரியாதது எட்டு

    தெரிந்தது இரண்டு தெரியாதது எட்டு

    ஒரு மகன் வெளியூர் சென்று சம்பாதிக்கவேண்டும் என தன்  தாயிடம் மன்றாடுகிறான். தாயிற்கோ மகனைப் பிரிய இஷ்டம் இல்லை. சென்றே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மகனுக்கு கட்டுச்சாதம் கட்டி அனுப்பி வைக்கும்பொழுது, தாய், “போகும் வழியில் புளியமரத்தின் அடியில் சாப்பிட்டு ஓய்விடு, ஊருக்குத் திரும்பி வரும் வழியில் வேப்பம் மரத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாறு” என்கிறாள். அன்னையின் ஆணைப்படி, செல்லும் வழியில் புளியம் மரங்களை கண்டு ஓய்வு எடுக்கிறான்.…

  • நீர்வழிப் படூஉம் – என் வாழ்வனுபவம்

    நீர்வழிப் படூஉம் – என் வாழ்வனுபவம்

    ஒரு நல்ல நாவல் என்பது ஒரே மூச்சில் முழு நாவலையும் எத்தனை பக்கமாக இருப்பினும் கவனத்தை சிதறவிடாமல் வாசிக்க வைப்பது வாசித்துமுடித்ததும் எதிர் சுவரைப் பார்த்துக்கொண்டு விழி பிதுங்கி அமர்ந்திருக்கச் செய்வது இனி ஒரு வாரத்துக்கு எதுவும் வாசிக்கமாட்டேண்டா சாமி, இதை அப்படியே மனசுக்குள்ள வைத்துக்கொண்டு கொண்டாடுகிறேன் சாமி என நினைக்க வைப்பது. ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்த வயதானவனாக நாவல் முழுவதையும் அசைபோட வைப்பது.  இப்படி எழுதியிருக்கலாம் அப்படி…

  • வாசிக்கவைக்கும் அப்பாக்கள்

    வாசிக்கவைக்கும் அப்பாக்கள்

    சேட்பாட்டிடம் ஒரு கேள்வியை கேட்க, அது தன்னை ஜட்ஜ் பண்ணும் என்ற கவலையில்லை. நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை.   AI-ஐ தனது நண்பனென பாவிக்கும் , எல்லாமே அதற்குத் தெரியும் என்று நினைக்கும் நண்பர் ஒருவர்,  “Why do we celebrate Father’s Day ?”  என்று கேட்டுக்கொண்டிருக்கலாம். எனக்கு நண்பன் எல்லாமே புத்தகம்தான். எனக்கான எண்ணற்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் புத்தகங்களில் ஒன்றான, ‘நாலு மூலை’ என்ற…

  • பண்பாட்டைக் கண்டடைதல் – ஜல்லிக்கட்டு

    பண்பாட்டைக் கண்டடைதல் – ஜல்லிக்கட்டு

    அலங்காநல்லூரிலும் அவினாயபுரத்திலும் நடக்கும் ஜல்லிக்கட்டில்,  வாடிவாசல் வழியே துள்ளி வரும் காளையை அடக்க,  ஜீன்ஸும் டீசர்ட்டும் அணிந்த இன்றைய இளைஞர்களில், எத்தனை சதவீதத்தினருக்கு,  அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் முன்னோர்கள் மேல்சட்டை கூடப் போடாமல் நடுமுதுகில் வியர்வை ஆறென ஓட,  காளையை அணைவார்கள் எனத் தெரியும்? காளையின் திமிலைப் பிடிக்க முயற்சி செய்து வழுக்கி விழும் இளைஞன் ஒருவனைப் பார்த்து,  “காளையின் கொம்புகளை கண்டு அஞ்சுபவனை மறுபிறவியிலும் தொடமாட்டேன்” …

  • பாரதி ராஜா – அஞ்சலி

    பாரதி ராஜா – அஞ்சலி

    நான் முளைத்து மூன்று இலை விடாததற்கு முன்னரே, என்னைவிட வயதில் மூத்த சகோதர்களால் ,  நல்ல படத்திற்குப் பின்னால் இருப்பவர் இயக்குனர் என்பதை கற்றுக்கொண்டேன். திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி. நாகராஜனிடம் என்ன சிறப்பு, பாலச்சந்திரனின் கதாநாயகி செருப்பைக் கழட்டிக்கொண்டே வசனம் பேசுகிறாள், ஶ்ரீதர் படம்,  என்று வீட்டு முற்றத்தின் நிலா வெளிச்சத்திலும், பள்ளி சென்று வீடு திரும்பும் நடைபாதையிலும்,   பாலபாடம் எடுத்தார்கள்.  பெல்பாட்டம் பேண்ட் போட்ட ஒரே…

  • பண்பாட்டைக் கண்டடைதல்

    பண்பாட்டைக் கண்டடைதல்

    நான் மிகவும் தாழ்வு மனப்பான்மையாக உணர்ந்த தருணம் அதுதான். வேலை பார்க்கும் அலுவகலத்திலேயே, ஒரே வேலையை பல வருடமாக செய்து சலித்துப்போய், இன்னொரு துறைக்கு மாற்றிக்கொண்டு சென்றிருந்தேன். புதிய குழுவில் அறிமுகமான நண்பர் சேடிடம், சம்பிரதாயமான குடும்பம் குடித்தனம் கேள்விகள் வந்த பொழுது, அவருக்கு ஒன்பது குழந்தைகள் என்றார். எட்டுப் பெண்கள் ஒரு பையன். “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்,” என்ற கேள்விக்கு, ஒரே பையன் என்று சொன்னால் சாதனையாளனாக இருக்காது.…

  • வாசிப்புப் பயணம் – 2025

    வாசிப்புப் பயணம் – 2025

    யாராவது , ஒரு ரகசியம், உங்களுக்கு அப்புறம் சொல்கிறேன் என்று என்னிடம் சொன்னால், பரவாயில்லை அப்புறம் சொல்லுங்கள் என்று எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் இருப்பேன். ராதா-விடம் , ‘சாப்பிடறப்பதான் இது ஞாபகம் வருகிறது. இப்பச் சொன்னா நல்லா இருக்காது’ என்று பீடிகை போட்டால், அவரால் சாப்பிடமுடியாது. இப்படி இருவரும் வெவ்வேறுவிதமாக இயங்குபவர்களாக இருந்தாலும் , ஜெகதீஸ்குமாரின், பொற்குகை ரகசியம், சிறுகதை தொகுப்பை, எந்தக் கதையில் என்ன ரகசியம் வைத்துள்ளார் என்று…

  • தன்னை முன்னிறுத்தலும் ஆவணப்படுத்தலும்

    தன்னை முன்னிறுத்தலும் ஆவணப்படுத்தலும்

    தனக்கிருக்கும்  அசையா சொத்து அசையும் சொத்து எனப்பேசி நான் பெரிய ஆளென பெருமை கொள்ளும் தற்பெருமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதிவு இல்லை இது. எழுத்தாளனாக, ஓவியனாக, இசைக்கலைஞனாக, பாடகனாக, அறிவியளாலனாக  தனது துறையில், தனக்கென தனித்துவம் கொண்டு, அயராது உழைக்கும் ஒருவர்,  கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பவருக்கு, தன்னை முன்னிறுத்தலையும் அதை சார்ந்து ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் பதிவு.  அமெரிக்க நிறுவனங்கள், வசந்த காலத்தில், கல்லூரி பல்கலைக்கழகங்களிலிருந்து சில மாணவர்களை…

  • காதலின் பல வண்ணங்கள்

    காதலின் பல வண்ணங்கள்

    இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிய கணத்தில் அவர்களுக்குள் காதல் பிறந்தது. விஷ்ணுபுரம் விருது விழா – 2019-ல் இசையின் கண்களை  நான் சந்தித்த கணத்தில் “இவரை பார்த்தா எம் எல் ஏ மாதிரி இருக்காரு. இவர் எப்படிக் கவிதை எழுதுவாரு” என்றுதான் லௌகீக சௌந்தராக முதலில்  நினைத்தேன். அவருக்கான விழா அமர்வில்,  அவர் பேசப்பேசவே வாசகன் சௌந்தராக, கவிஞர் இசையை இனம் கண்டு கொண்டேன். திருச்சிக்குப் போனால் தவறாமல்…

  • மழையில் நனையும் குதூகலம்

    மழையில் நனையும் குதூகலம்

    (08/01/2019-ல் எழுதிய வாசிப்பனுபவத்தின் மீள்பதிவு) நான் வாழ்வின் ஆதாரத் தேடுதலுக்காக பார்க்கும் மென்பொருள் உருவாக்கும் பணியில், எழுதிய மென்பொருள் நினைத்தபடி வேலை செய்கிறதா என்று  சுய பரிசோதனை (unit testing) செய்ய வேண்டும். அப்புறம் ஒரு கட்டமைப்பானா அடிப்படை சோதனைகளை (Smoke Testing) கடக்கிறதா என்று பார்க்கவேண்டும். இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, மற்ற பயனர்கள்  பார்வையில் , எழுதியவன்  நினைத்து பார்க்காத சோதனைகளைகளையெல்லாம் (Regression testing) கடக்கவேண்டும்.  அதையும்…