-

வாசிப்பு வைத்தியன்
முதல் நாள் அந்த நிறுவனத்திலிருந்து நிதிப்பற்றாக்குறையால் வெளியில் அனுப்பப்பட்ட ஏழாயிரம் அலுவலர்களில் அவரும் ஒருவராக இருக்கலாம். மறு நாள் காலையில் அவர் பார்க்கும் தொலைக்காட்சியில் இருபது வருடங்களுக்கு முன்னர் ஆயிரம் டாலர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் இப்பொழுது உங்கள் கையில் நூறாயிரம் டாலர்கள் இருக்கும் என்று தொலைக்காட்சியில் ஒருவர், மேலே மேலே செல்லும் நிறுவனத்தின் பங்குகளின் விலையை படம் போட்டுக் காட்டினால் எப்படி இருக்கும் ? நடப்பதே அவரது…
-

கொட்டுக்காளி – யாவரும் பார்க்கலாம்
விஜய் ரெங்கராஜன் எழுதிய வெறியாட்டுக் கதையில், கதை சொல்லி ஷண்முகம், தமிழாசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இப்படி சொல்கிறான். //வேலன் வெறியாட்டு சங்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு சடங்கு முறை. தன் பெண் மெலிந்துகொண்டிருக்கிறாள் எனக் கண்டு, யாரோ ஒருவன் மீது காதல்கொண்டிருக்கலாம் என்று எண்ணி, அத்தலைவனின் நினைவை அவளிடமிருந்து அகற்றுவதற்காக செய்யும் சடங்காகும். // செயற்கை நுண்ணறிவு வந்து தன் வேலையே பறிபோகும் என பதறிக்கொண்டிருக்கும் ஒருவன், இந்த சங்ககாலச்…
-

யமுனை ஆற்றிலே
(மறு ஆக்கம்) மும்பை மாமாவின் போனிற்காகக் காத்திருந்தேன். ஏன் எல்லோரும் அந்த மாமாவைப்போல் யோசிக்கமாட்டேன் என்கிறார்கள். அவர் ஒருவரிடமிருந்துதான், இந்த இரண்டு நாட்களாக அம்மாவிடமிருந்து திட்டுகளாக வாங்கிக்கொண்டிருக்கும் என்னைக் காப்பாற்ற முடியும். பத்தாம் வகுப்பில் , 500-க்கு 175 வாங்கிய என் அம்மா, எனது 375-ஐத் தாங்கமுடியாமல் அங்கலாயப்பட்டாள். குடியே முழுகிவிட்டதுபோல், ஒப்பாரி வைத்தாள். எனக்குப் பிடித்தப் பாட்டை அவள் காதுபடப் பாடினால், இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று கூப்பாடு…
-

போடி லூசு
(மறு பிரசுரம்) அன்று அம்மா தினம். அம்மாவிற்கு, நான் அம்மாதின வாழ்த்தோ, ஒரு சின்னப் பரிசோ கொடுக்காதது பற்றிச் செல்லக் கோபம். எனக்கோ அம்மாவின் மீது கோபம். அம்மாவிற்குத்தெரியும், எனது கோபத்திற்குக் காரணம், மாலதிக்கு அவள் அம்மாதின வாழ்த்துச் சொல்லவில்லை என்பதுதான். எனக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்த மாலதி என்னும் ஆசிரியரை அழைத்து, அம்மாதினத்தன்று கூப்பிட்டு, ” அம்மாதின வாழ்த்துக்கள்” சொன்னால், “போடி லூசு” என்றாள். “நீ என்றைக்கு மாலதியைக் கூப்பிட்டு…
-

சசிகுமார் – அன்றாடத்தின் நாயகன்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் , எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள், டாலஸ் தமிழ் சங்கவிழாவில் நடிகர் சசிகுமார் அவர்களை எனக்கும் ராதாவிற்கும் அறிமுகப்படுத்தினார். சசிகுமார் அவர்கள் ஜேம்ஸ் வசந்த், சரியான தமிழ் வார்த்தைகளை யூகிக்கும் வினாடி வினா ஒன்றை குழந்தைகளுக்காக நடத்தினார். சசிகுமார் அவர்களும் ஒரு பள்ளிச் சிறுவனைப் போல யூகித்து வடமும் இடமுமாக அமர்ந்திருந்த எங்களிடம் பகிர்ந்து சரியாக இருந்தால் புன்முறுவல் புரிந்தார். பவா, அவரது கதையாடலின்போது, தங்கள்…
-

வீர தீர சூரன் – பார்க்கவும் ரசிக்கவும்
மணி ரத்னத்தின் இயக்கத்தில் வரும் எல்லா படமும், வெற்றி மாறனின் இயக்கத்தில் வெளிவருகின்ற எல்லா படமும் என்று பார்ப்பவன் நான். அந்த வரிசையில் விக்ரம் நடித்த படம் என்றாலும் பார்ப்பவன். அப்படித்தான் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், SJ சூர்யா, நடிப்பில், தேனி ஈஸ்வரன் ஒளியமைப்பில், GV பிரகாஷ் குமார் இசையமைப்பில், வெளிவந்துள்ள “வீர தீர சூரன்” சினிமா-வை அமேசான் பிரைமில் பார்த்தேன். படம் விறுவிறுப்பாக…
-

கதை சொல்லும் ஓவியங்கள்
வாடிகன் அருங்காட்சியகத்தில், ஓவியங்களை பார்த்து அதிசயத்திருந்த நாங்கள், மைக்கேல் அஞ்செலோ வாழ்ந்த ஊரான ஃப்ளொரன்ஸில் அவர் வடிவமைத்த சிலையை பார்க்க முடியாமல் போன ஏமாற்றம், எல்லாம் சேர்ந்து வெனிஸில் ஒரு அருங்காட்சியகத்தையாவது முழுக்கு முழுக்க நிதானமாக பார்க்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தோம். வெனிஸ் சென்றும் சேராததுமாக, Gallerie Academia-விற்கு முன்பதிவு செய்வதற்கான முயற்சிகளை எடுத்தோம். இணையத்தில் பதிவு செய்வதில் இருந்த இன்னல்களை கடக்கமுடியாத நிலையில் , நாங்கள் தங்கியிருந்த விடுதியினரை…
-

வாடிகன் அருங்காட்சியகத்தில் சிங்கமுக அன்னை
ரோம் நகரமென்றால், “You too, Brutus” என்று பிரபலமான வசனத்தின் மூலமாக தெரிந்திருந்த ஜூலியஸ் சீசரையும், அவரைக் கொன்ற நண்பர்களையும், சீசரின் காதலியான கிளியோபாட்ராவையும், எகிப்து இத்தாலிக்கான வரலாற்றையும் மேலும் அறிந்துகொள்ள கிளியோ பாட்ரா, ஜூலியஸ் சீசர் வரலாற்றைச் சொல்லும் படங்களை ஆவணங்களை பயணத்தின் முன் தயாரிப்பாகப் பார்த்தோம். மைக்கேல் அஞ்செலோவின் கலைப் படைப்புகளையும் அங்கு பார்க்கவிருக்கிறோம் என்பதை அறிந்திருந்தும், முன்கூட்டியே அனுமதிச் சீட்டை வாங்காததால், Florence-ல் அவரது ஆகச்சிறந்த…
-

பசிக்கும்லே
ராதாவிற்கு ஒரே கவலை. கோழிக்கறிகூட சாப்பிடாத விரதத்தில் இருக்கும் நாம் இத்தாலி பயணத்தில் பத்து நாட்கள் வெறும் மரக்கறி உணவாக சாப்பிட்டு எப்படி சமாளிப்பது என. பிஸ்ஸா அவருக்குப் பிடித்த உணவெனினும், பத்து நாட்களுக்கு மனுஷன் அதை மட்டும் சாப்பிட்டிக்கிட்டிருந்தா நாக்கு செத்துப்போகாதா என்ற கவலை. சஹா , “பிஸ்ஸா இங்கு சாப்பிடுவதுபோல இருக்காது. அங்கு வேறு மாதிரி சுவையாக இருக்கும். இங்கு கொத்து பராட்டோ சாப்பிடுவதற்கும், தமிழ்நாட்டில் கொத்து…
-

நட்சத்திர வாசகர்
ஜெயமோகனுக்காக, தனது கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்று சொன்ன ரீடர் செந்திலை நண்பர்களுக்குத் தெரியும். இந்த வருடம் ஜனவரியில் பொங்கல் சமயத்தில் ஒரு நாள், அவரை அழைத்திருந்தேன். “சார், ஆசான் அப்பப்ப சென்னைக்கு வருவாரு. நான் போய் பார்த்திட்டு வருவேன். நீங்க போன அக்டோபரில், அவரை கொண்டுபோய் அமெரிக்காவில வைச்சுக்கிட்டீங்க. நான் , நாகர்கோவில் போய் அவர் வீட்டு வாசப்படில பத்து நிமிஷம் உட்கார்ந்திருந்தேன்.” என்றார். வெண்முரசை , முழுக்க முடித்த…