-

பொன்னியின் செல்வன் – காட்சிவடிவ வெற்றி
(மறு பிரசுரம்) ‘பொன்னியின் செல்வன்’ படம் எப்பொழுது தியேட்டருக்கு வரும் என்று காத்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன். படம் பார்ப்பதற்கு முன்னர் , கல்கியின் நாவலை வாசித்து தன்னை தயார் செய்துகொண்டவர்களில் ஒருவன். ‘பொன்னி நதி பாக்கனுமே’ பாடல் வெளிவந்த நாள் முதல், அலுவலகம் செல்லும் ஆறு மைல் பயணத்தில் தினமும் இரண்டு முறை, அதைக் கேட்பவன். இத்தனைக்கும் பிறகு, முதல்முறை படம் பார்த்தபொழுது, ஏதோ ஒன்று இல்லாததைப்போல உணர்ந்தேன்.…
-

மாமன்னன் – மனதைத் தொடுகிறார்
(மறு பிரசுரம்) நாய், பன்றி, மனிதன் என எல்லா உயிர்களின் இரத்தமும் திரையையும் தாண்டி எதிரில் இருக்கும் ரசிகன் மேல் தெறிக்கும் அளவுக்கு இரத்தம். அதனால் ஒவ்வாமை வந்து ஒதுக்கிவிட்டோம் என்றால், ஒரு நல்ல படத்தைப் பார்க்கத் தவறவிட்டுவிடுவோம். இரத்தம் சிதற வைக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ்தான், பன்றியை ரசிக்கும் நாயகனையும் அறிமுகப்படுத்துகிறார். அவரே பன்றிகளை பாசத்துடன் வளர்க்கும் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்), பன்றிகளை நாய்களைவிட்டு குதறவைக்கும் ரத்னவேல் (பகத்…
-

சீண்டும் துன்பத்தைத் தவிர்ப்போம்
(மறு பிரசுரம் ) அந்தக் கொடுமை நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும், ஒரு பார்வையாளனாகத்தான் நான் இருந்திருக்கிறேன். வேடிக்கைமட்டும் பார்த்துக்கொண்டு,ஒரு கையாளாகாதவன்போல், நின்றுகொண்டிருந்த என்னைப்பற்றி, ஜோசப் என்ன நினைத்து இருப்பான். என்மேல், கண்டிப்பாக கோபப்பட்டிருப்பான். அவனுக்கு அந்தக்கொடுமை நடக்கும் நாட்கள் நடந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இன்று நினைத்தாலும் எனக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து போகிறது. நாம் ஏதாவது செய்திருக்க வேண்டுமோ என்று. நான் அப்பொழுது கலிபோர்னியாவில் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள்…
-

2024-லும் ராதாவும் சௌந்தரும் வாசித்தார்கள்
2024-ல் மொத்தம் 101 புத்தகங்கள் எங்கள் வீட்டு நூலகத்தை வந்தடைந்துள்ளன. 2023-ல் அவற்றுக்கென நாங்கள் கட்டியமைத்த புத்தக அல்மேராவைக் கண்வைத்திருக்குமென நினைக்கிறோம். டஜன் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன. 2023-ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது வாங்கிய யுவன் சந்திரசேகரை மார்ச் 2024-ல் ராதாவும் நானும் பார்க்கச் சென்றோம். “அன்புடன் யுவன்” என்று அவர் கையெழுத்திட்ட இரு புத்தகங்கள் (சரி செய்யமுடியாத சிறு தவறுகள், வேதாளம் சொன்ன கதை). அதே மார்ச்சில்,…
-

காதலிக்க நேரமில்லை – என் பார்வை
தைப் பொங்கலுக்கு வெளிவந்த தமிழ்ப்படங்களில், காதலிக்க நேரமில்லை கலைப்படமல்ல. மாறி வரும் இளைஞர்களின் சிந்தனையை, போக்கை புரிந்து ஏற்றுக்கொள்ளவேண்டிய எதார்த்ததை அளவான நாடகத்தருணங்களுடன் சித்தரிக்கப்பட்ட சினிமா. AR ரஹ்மானின் இசையும், பாடல்களும் கதையையும் பாத்திரங்களின் எண்ணங்களையும் ரசிகனுக்கு கடத்துகின்றன. கதாநாயகியின் பின்னால் சுற்றும் cliche கதாநாயகனை காண்பிக்காமல், உலகம் இவ்வளவு கஸ்டப்பட்டிருக்குப்ப நமக்கு குழந்தை வேணுமா எனக் காதலியிடம் கேட்கும் இளைஞன். ஒரு பாலின நண்பனை முழுக்க முழுக்க கிண்டல்…
-

தமிழ் சினிமா விமர்சனம் – கசக்கும் உண்மை
வாசிப்பனுபவம் எழுதுவதற்கு என, தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்கள் க.நா.சுப்ரமண்யம், அசோகமித்திரன், சி.சு. செல்லப்பா, ஜெயமோகன் எழுதியுள்ள புத்தக மதிப்புரைகளை வாசித்து, எழுதி எழுதி சாதனை படைத்தவர்களின் இலக்கிய விமர்சன உரைகளை கேட்டு என கற்றுக்கொள்ளும் முயற்சிகள் பல செய்து இருக்கிறேன். ஆடிக்காற்றுக்கும், அமாவாசைக்கும் மட்டும் சினிமா விமர்சனம் எழுதுபவன் என்றாலும், வாசிப்பனுபவம் எழுத எடுத்த சிறு சிறு முயற்சிகளேனும் சினிமா ரசிகனாக செய்து இருக்க வேண்டும். சினிமா விமர்சனம் பற்றிய…
-

படைப்பாளிகள் வாசகர்கள் சூழ படைப்பாளியின் திருமணம்
எழுத்தாளர் அஜிதன் அவர்களின் முதல் படைப்பான மைத்ரி நாவலே , அவரது அடுத்த அடுத்த படைப்புகளை என்னை ஒரு எதிர்பார்ப்புடன் வாசிக்க வைத்துவிட்டன . ஒரு வாசகனாக அவரது படைப்புகளை வாசித்து அவருக்கு சிறுசிறு குறிப்புகளை எழுதி அனுப்புவேன். அவரது படைப்புகளில் ஒன்றை வைத்து ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்களுக்கு சொந்தக்காரர் என்று அன்புடன் அவரை அழைக்கும் அளவிற்கு அணுக்கம். நான் அணுக்கமாவது இருக்கட்டும். அஜிதனின் படைப்புகளை வாசித்த வாசகர் ஒருவர் , …